வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

நவரச நாயகன் சொந்த குரலில் பாடிய 7 பாடல்கள்.. 90 களில் திருவிழாக்களில் கலை கட்டிய அந்த பாட்டு

Actor Karthick as blayback singer: நடிகர் கார்த்திக் இன்று வரை தன்னுடைய வசீகரமான முகத்திற்காக கொண்டாடப்பட கூடியவர். கார்த்திக்கின் நடிப்பில் எந்த ஆரவாரமும் இருக்காது, எப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான காட்சியையும் கூலாக நடித்துவிட்டு போவது தான் அவருடைய ஸ்டைல். நிறைய நல்ல ஹிட் படங்களின் நடித்த முன்னணி ஹீரோவாக இருந்த கார்த்திக், தன்னுடைய சொந்த குரலில் பாடல்களும் பாடியிருக்கிறார்.

நடிகர் கார்த்திக் பாடிய 7 பாடல்கள்

நடிகர் கார்த்திக்கை பின்னணி பாடகர் ஆகிய பெருமை இசை அமைப்பாளர் ஆதித்யனுக்கு தான் உண்டு. ஆதித்யன் 1992 ஆம் ஆண்டு அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக அறிமுகமானார். இந்த படத்தில் வரும் சந்திரரே சூரியரே பாடல் இன்றுவரை பலரது தாலாட்டு பாடலாகவே இருக்கிறது. இந்த படத்தில் தான் முதன் முதலில் கார்த்திக் தன்னுடைய சொந்த குரலில் நான் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலை பாடினார்.

அமரன் படம் பொருளாதார ரீதியாக பெரிய அளவுக்கு எல்லாம் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் கார்த்திக் பாடிய நான் வெத்தல போட்ட சோக்குல பாடல் பட்டி தொட்டி எங்கும் பயங்கர வைரலானது. இந்த பாடல் இல்லாத திருவிழாக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டம் இருந்தது. இன்று வரை கிராமப்புறங்களில் திருவிழாக்களின் போது மைக் செட்டுகளில் இந்த பாட்டை கேட்கலாம்.

Also Read:இந்த 5 பாடல்கள் லதா ரஜினிகாந்த் பாடியதா!. பின்னணிப் பாடகியாக கலக்கிய சூப்பர் ஸ்டாரின் மனைவி

இயக்குனர் விஜய் கணேஷ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு சுயமரியாதை படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு சிவாஜி ராஜா இசையமைத்தார் இந்த படத்தில் வரும் வான்  மீது மேகம் என்னும் பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து கார்த்திக் பாடியிருப்பார். 1998 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெள்ளி வந்த பூவேலி படத்திலும் ஆச்சி மனோரமா உடன் இணைந்து கதை சொல்லப் போறேன் எனும் பாடலை பாடி இருப்பார்.

அறிமுக இசையமைப்பாளர்களின் படங்களில் பாடிக்கொண்டிருந்த கார்த்திக் இசைஞானி இளையராஜாவின் இசையிலும் பின்னணி பாடகர் ஆனார். 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான சின்ன ஜமீன் படத்தில், இளையராஜா இசையில் ஒனப்பந்தட்டு என்னும் பாடலை பிரபல பாடகி ஸ்வர்ணலதா உடன் இணைந்து கார்த்திக் பாடியிருந்தார்.

இளையராஜாவை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பில் வெளியான சிஷ்யா படத்தில் அப்போலோ அப்போலோ என்னும் பாடலை கார்த்திக் பாடியிருக்கிறார். அதேபோன்று இசையமைப்பாளர் எஸ் கே ராஜ்குமார் இசை அமைப்பில் பிஸ்தா படத்தில் கோழிக்கறி கொண்டு வரட்டா என்னும் பாடலையும் கார்த்திக் தான் பாடியிருக்கிறார். 1998 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஹரிச்சந்திரன் படத்தில் இடம்பெற்ற அரிச்சந்திரன் வரான் என்னும் பாடலை பாடியதும் கார்த்திக் தான்.

Also Read:யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்

- Advertisement -spot_img

Trending News