Sivakarthikeyan made Amaran’s character: செம ஜாலியான ஏலியன் கான்செப்டில் அயலான் என்ற படத்தை சமீபத்தில் கொடுத்த சிவகார்த்திகேயனை எல்லோரும் நம்ம வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர். அவர் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
இந்த படம் ஒரு பயோபிக். அந்தப் பயோபிக் கேரக்டரையே சிவகார்த்திகேயன் இப்போது அசிங்கப்படுத்தி விட்டார். கொடுத்த காசுக்கு மேல ஓவரா கூவக்கூடாது என்றும் நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை விலாசுகின்றனர். விஜய், கமல் என இப்போ இருக்கும் டாப் ஹீரோக்கள் எல்லாம் தங்களின் படங்களில் கெட்ட வார்த்தைகளை பேசி ட்ரெண்டாக்குகின்றனர்.
‘அடுத்த தளபதி’ ரேசில் இருக்கும் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசாமல் இருந்தா எப்படி! அதுவும் சிவகார்த்திகேயன் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜரின் வாழ்க்கை கதையான அமரன் படத்தில் கெட்ட வார்த்தை பேசி இருப்பது யாராளுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பயோபிக் கேரக்டரையே அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்
சமீபத்தில் வெளியான அமரன் டீசரில் தீவிரவாதிகளை சுட்டுக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் அவர் ஒரு கெட்ட வார்த்தையை பேசி இருக்கிறார். அமரன் படத்தில் மிலிட்டரி மேன் கெட்டப் போட்டிருக்கும் சிவகார்த்திகேயன், இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல. மிலிட்டரி என்றாலே டிசிப்ளின் தான். ஒரு பயோபிக் ஸ்டோரியில் கெட்ட வார்த்தை பேசி இருப்பது இப்போது சோசியல் மீடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு சமூக ஆர்வலர்கள் பலரும் உடனடியாக அந்த படத்தில் இருந்து கெட்ட வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் ஆவேசப்படுகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு கிட்ஸ் ஃபேன்ஸ் தான் அதிகம் என்பதால், அந்த கெட்ட வார்த்தையை பேசும்போது எஸ்கே கொஞ்சம் யோசிச்சு இருக்கணும்.