செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

GOAT படத்திற்காக ஆந்திராவில் டிமாண்ட் உள்ள பிரபலத்தை தூக்கிய விஜய் .. தட்டி கொடுத்து அனுப்பிய மகேஷ் பாபு

GOAT: லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் GOAT படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் விஜய் தன்னுடைய அரசியல் அறிவிப்பு மற்றும் சினிமாவை விட்டு விலகுவதாக சொன்ன பிறகு இந்த படத்தின் பேச்சு அப்படியே குறைந்து இப்போது தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதனால் இயக்குனர் வெங்கட் பிரபு GOAT படத்திற்காக என்னென்ன விஷயங்களை வைரலாக செய்ய முடியுமோ செய்து வருகிறார்.

ஏற்கனவே பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், சினேகா என பெரிய நட்சத்திரங்களோடு இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட, திடீரென ஏதாவது ஒரு பிரபலமானவர்கள் படத்தில் இணைகிறார்கள். அப்படி GOAT படத்தில் ஒரு பெரிய பிரபலம் சமீபத்தில் இணைந்து இருக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய நல்ல விமர்சனத்தை பெற்ற படம் குண்டூர் காரம். இந்த படத்தில் இடம் பெற்ற Kurchi Madathapetti பாடல் பெரிய அளவில் வைரலானது. வீடியோ வெளியாகி ஒரு சில வாரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்தது. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் தான் நடன இயக்குனர் சேகர்.

Also Read:விஜய் இடத்திற்கு தகுதியான ஒரே ஆளு இவர் மட்டும் தான்.. என்னடா இது இவ்ளோ காரணம் சொல்றாங்க.!

தற்போது விஜய் GOAT படத்திற்காக, குண்டூர் காரம் படத்தின் நடன இயக்குனர் சேகரை பணிபுரிய வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ்பாபுவிடம் விஜய் நேரடியாக பேசி சேகரை இந்த படத்திற்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது. மகேஷ் பாபுவுக்கு ஓரளவிற்கு தான் நடனமாட தெரியும், அவரையே அந்தப் பாட்டில் பக்காவாக ஆட வைத்திருந்தார் சேகர். அப்படி இருக்கும்போது விஜய்க்கு நடனம் சொல்லிக் கொடுப்பதெல்லாம் மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லிக் கொடுப்பதற்கு சமம் தான்.

பாடலுக்கான படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு லொகேஷன் எல்லாம் முடிவாகி பட குழு விரைவில் ரஷ்யா செல்கிறது. பாடல் காட்சிக்கான ரிகர்சல் முழுக்க நடிகர் விஜய் வீட்டிலேயே பத்து நாட்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த பாடல் பெரிய அளவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. குண்டூர் காரன் பாடலுக்கு இணையாக, ஏன் அதை விட ஒரு படி மேலாக இந்த பாடல் வைரலாக வேண்டும் என்பதுதான் பட குழுவின் திட்டம்.

Also Read:அரசியல் எதிரியை தேர்ந்தெடுத்த தளபதி.. எதிராக கிளம்பிய விஜய் இணைய கூலிப்படைகள்

Trending News