Thalapathy Vijay: இவ்வளவு பண்ணியும் மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டியே என ஒரு காமெடி டயலாக் இருக்கும். அப்படித்தான் ஆகிவிட்டது இப்போது விஜய் நிலைமை. வருட கணக்காக பிளான் போட்டு, அரசியலுக்கு என்று ஒரு நாள் குறித்து தரமான சம்பவம் என வரும் பொழுது, யோசிக்காமல் மிஸ் பண்ணிய சின்ன விஷயத்தால் தளபதி விஜய் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் நிலைமை இருந்தது. இப்போது கட்சியின் பெயரை அறிவித்ததோடு, தன்னை ஒரு அரசியல் கட்சி தலைவராக நிலை நிறுத்தும் முயற்சியையும் தொடங்கி இருக்கிறார். ஒரு பக்கம் சமூக சேவை, ஒரு பக்கம் சமூகத்திற்காக குரல் கொடுப்பது என ஒரு அரசியல்வாதியாய் தன்னுடைய நகர்வை பொறுமையாக நகர்த்தி வருகிறார்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இருக்கட்டும், ஆரம்பித்ததற்கு பிறகாக இருக்கட்டும் தொடர்ந்து தன்னுடைய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தார் விஜய். இதன் முதல் கட்ட நகர்வு என்பது கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை மையமாக வைத்து தான் இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக கட்சியில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என பெரிய பிளான் எல்லாம் போடப்பட்டது.
Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராவது எப்படி.? வீடியோ மூலம் தொடங்கி வைத்த தளபதி
கரெக்டாக போட்ட திட்டத்தின் படி நேற்று மார்ச் எட்டாம் தேதி விஜய் தன்னுடைய கட்சியின் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் இருக்கும் உறுதி மொழிகளை எல்லாம் படித்து முடித்துவிட்டு உங்களது சம்மதம் இருந்தால் கண்டிப்பாக கட்சியில் சேருங்கள் என வலியுறுத்தி இருந்தார். அந்த வீடியோவில், மக்களின் கண் முன்னே தன்னை கட்சியின் உறுப்பினராகவும் சேர்த்துக் கொண்டார்.
விஜய் திட்டமிட்டபடி எல்லாமே சரியாக நடந்து வந்தது. இதில் அவர் எதிர்பார்க்காத விஷயம் என்னவென்றால், இவ்வளவு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் தன்னுடைய கட்சியில் இணைவார்கள் என்பதை தான். அதாவது நேத்து 40 நிமிடத்திற்குள் ஒரு மில்லியன் பேர் கட்சியில் இணைவதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் ஓடிபி அனுப்பும் தரவு தளம் ஸ்தம்பிக்கப்பட்டு, செயலி அப்படியே வேலை செய்யாமல் நின்று விட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலில் தொடங்கப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு பேர் தன் கட்சியில் சேர முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் விஜய்க்கு பாசிட்டிவ் தான். ஆனால் விஜய் கோட்டை விட்டது டெக்னாலஜியில். இவ்வளவு பேர் இணைவதற்கு சரியான டெக்னாலஜியை அந்த செயலில் பயன்படுத்தாததால் தான் நேற்று நிறைய உறுப்பினர்களை அந்த கட்சி இழந்து விட்டது.
மீண்டும் அந்த கட்சியின் வெப்சைட் பழைய நிலைமைக்கு வந்தாலும், அதே ஆர்வத்தோடு மக்கள் இணைவார்களா என்பது சந்தேகம்தான். எதற்கும் சரியான கால நேரம் இருந்தால்தான் திட்டமிட்டபடி எல்லாமே நடக்கும். இப்போதைக்கு விஜய்க்கு அரசியலில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அவருடைய கட்சி பக்கத்தில் டெக்னாலஜி கொஞ்சம் அடி வாங்கி இருக்கிறது. இனிவரும் காலங்களில் அவர் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் உஷாராக செயல்படுவது ரொம்பவும் முக்கியம்.
Also Read:விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!