DMDK Vijayaprabhakaran:விஜயகாந்தை காதலித்த நடிகை உடன் மோதும் விஜய பிரபாகரன்.. பணத்தாசையால் நன்றி மறந்துட்டாங்க!
நாடாளுமன்ற தேர்தல் வேலைகள் ரொம்ப பரபரப்பா போய்ட்டு இருக்கு. தமிழ்நாட்டுல ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு தொகுதியிலும் வெயிட்டான போட்டியாளர்களை நிறுத்த கட்சிகள் ரொம்ப யோசிச்சு வேல செஞ்சு இருக்காங்க.
அதுவும் இந்த முறை தேமுதிக கட்சி மீது தமிழக மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பேரிழப்பு தான். தமிழ்நாட்டில் தேமுதிகவுக்கு வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, கேப்டனின் வாரிசுகளுக்கு மக்கள் நெஞ்சில் எப்பவும் இடம் இருக்கிறது.
கேப்டனின் மகன்கள் இருவரில் சண்முகபாண்டியன் சினிமாவில் அப்பா விட்டு சென்ற இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கிறார். விஜய பிரபாகரன் அரசியலில் அப்பா பெயரை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ, கேப்டனின் மகன்கள் இருவருமே சொக்கத் தங்கம் தான்.
அதிமுக உடன் கூட்டணி அமைத்து இருக்கும், தேமுதிக கட்சி இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சிறுது நேரத்திலேயே பாஜக கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் அந்த கட்சியின் சார்பில், விஜய பிரபாகரனை எதிர்த்து போட்டியிட களமிறங்கி இருப்பது நடிகை ராதிகா. விஜயகாந்த், ராதிகா சங்கதி ஊர் அறிந்த விஷயம் தான். அப்பா உடனான நட்பை கூட மறந்துவிட்டு கன்னுக்குட்டியுடன் போட்டியிட களமிறங்கி இருக்கிறார் நாட்டாமை பொண்டாட்டி.
பணத்தாசையால் நன்றி மறந்துட்டாங்க!
சினிமாவுக்காக எவ்வளவோ செய்த விஜயகாந்தின் மகனை எதிர்க்க இவருக்கு எப்படி மனசு வந்தது தெரியவில்லை. அரசியலில் அனுதாபம் என்று எதுவுமே இல்லை என்பதை நிரூபித்து விட்டார் ராதிகா. இதைத்தான் பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள் போல.
இத்தனைக்கும் சரத்குமாருக்கு சினிமாவில் அடையாளத்தை வாங்கி கொடுத்தவரே கேப்டன் தான். நட்புக்கும், நன்றிக்கும் அரசியலில் என்றைக்குமே இடம் இல்லை போல. எது எப்படியோ நாட்டாமை பொண்டாட்டியா, இல்ல சின்ன கவுண்டர் பையனா, ஜெயிக்க போவது யாருன்னு இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சிரும்.