திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

வெள்ளிக்கிழமை ஹீரோ என பெயர் வாங்கிய நடிகர்.. விஜய் சேதுபதி வரிசையில் சேர்ந்த கல்லாப்பெட்டி ஹீரோ

Vijay Sethupathi: பன்னி பத்து குட்டி போடும், சிங்கம் ஒத்த குட்டி போட்டாலும் அதுதான் காட்டுக்கு ராஜாவாக இருக்கும். எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமில்லை. எது நின்னு பேசுது என்பதுதான் முக்கியம். இது எல்லோருடைய வளர்ச்சியிலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்னு.

அதிலும் சினிமா துறைக்கு இந்த சூட்சமம் ரொம்பவே அவசியமாகும். ஒரு சில நடிகர்கள் வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்று விடுவார். ஒரு சிலர் கிடைச்ச வாய்ப்பெல்லாம் பயன்படுத்துறேன் என்ற பெயரில் வருஷத்துக்கு மூணு, நாலு படங்கள் எல்லாம் ரிலீஸ் பண்ணுவார்கள்.

ஆனால் ஒரு படமும் வேலைக்கு ஆகாது. இது தெரியாமல் தமிழ் சினிமாவில் சரிக்கியவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்ப காலகட்டத்தில் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆரம்பித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார்.

அதன் பின்னர் நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன், புது முகத்துக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக சொதப்பிவிட்டார். இந்த குறுகிய காலகட்டத்தில் வருஷத்துக்கு ரெண்டு, மூணு படம் எல்லாம் விஜய் சேதுபதிக்கு ரிலீஸ் ஆகும்.

ஆனால் வந்த சுவடு தெரியாமல் டாட்டா காட்டி விட்டுப் போய்விடும். வில்லனாக ஏதாவது ஒரு படத்தில் தான் நடிப்பார் அந்த படம் கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து விடும். இதனால் தான் விஜய் சேதுபதி தன்னுடைய இமேஜை கெடுத்துக் கொண்டார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் போது தான் தான் செய்தது தவறு என ஞாபகம் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி பட்டு தெளிந்து திருந்திய நேரம் தான் இன்னொரு ஹீரோவுக்கு இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இசையின் நாயகனாக உள்ளே வந்து இப்ப கதையின் நாயகனாக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இப்போது இவரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஃபார்முலாவை தான் பின்பற்றி வருகிறார். எக்கச்சக்கமான படங்களை நடித்து தள்ளிக் கொண்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை ஹீரோ

கடந்த மாதம் தொடங்கி இந்த மூன்று வாரங்களில் ரெபெல், கள்வன், டியர் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. முன்பெல்லாம் டாப் ஹீரோக்களின் படங்கள் இது போன்று தொடர்ந்து ரிலீஸ் அடிக்கும்.

அந்த படங்கள் வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆனதால் அந்த ஹீரோவுக்கு வெள்ளிக்கிழமை ஹீரோ என்று கூட பட்டப்பெயர் வைப்பதுண்டு. இப்ப இருக்குற சூழ்நிலைக்கு ஜிவி பிரகாஷ் தான் அந்த வெள்ளிக்கிழமை ஹீரோவாக மாறி இருக்கிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு எல்லாமே புரிவதற்குள் அவருடைய ஹீரோ இமேஜ் மொத்தமாக போய்விட்டது. இதைப்பற்றி சரியாக புரிந்து கொண்டு விஜய் சேதுபதியும் இந்த கமிட்மெண்டில் இருந்து சரியாக விலகிக் கொண்டார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி விட்டு சென்ற இடத்தை ஜிவி பிரகாஷ் பூர்த்தி செய்வது போலவும் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News