சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

மாஸ்டர் கிளாஸ் கமல் படத்துக்கு ஓடிடி போட்ட கேட்.. சர்வமும் அடங்கிப்போன ஏ எம் ரத்தினம்

Kamal Re release Film Structed: கில்லி படத்தின் ரீ ரிலீஸ்சில் கொள்ளை லாபம் பார்த்தார் ஏ எம் ரத்தினம். சமீப காலமாக எந்த ஒரு படமும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவரை தூக்கி விட்டது இந்த கில்லி படத்தின் ரீ ரிலீஸ். கிட்டத்தட்ட ஐந்து கோடிகளுக்கு மேல் வசூலித்துக் கொடுத்தது.

இப்பொழுது இந்த கலாச்சாரத்தை நிறைய தயாரிப்பாளர்கள் பின்பற்றி வருகின்றனர். கில்லி படத்தை போல் அஜித்தின் தீனா, மங்காத்தா, பில்லா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. அதுவும் முதலுக்கு மோசம் செய்யாத அளவுக்கு வசூலில் சாதனை படைத்து வருகிறது

சட்டப்பான ஆர்ப்பரித்த ஏ எம் ரத்தினம்

தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் பழைய மாஸ்டர் கிளாஸ் படமான இந்தியன் மற்றும் குஷி ஆகிய இரண்டு படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார். ஆனால் அவருக்கு பெருஞ்சிக்கலாக அமைந்துள்ளது பழைய சூப்பர் ஹிட் இந்தியன் படம்.

இந்தியன் படத்தை அந்த படத்தின் பைனான்சியர் சஞ்சய் வாத்வா பிரபல ஓ டி டி நிறுவனமான நெட் பிலிக்ஸ்க்கு ஒரு பெருந்தொகைக்கு விற்று விட்டார். அதனால் இந்த படத்தின் உரிமைகள் அனைத்தும் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

ஏ எம் ரத்தினம் இதை தியேட்டரில் ரீ ரீலீஸ் செய்து ஒரு பெருந்தொகையை வசூலித்து விடலாம் என்று எதிர்பார்த்தார் ஆனால் அது அவருக்கு கனவாகவே போய் உள்ளது. கில்லி படத்தால் வந்த சந்தோசத்தில் ஆர்ப்பரித்து இருந்த ரத்தினம் இப்பொழுது சட்டப் ஆகியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News