ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Ilaiyaraja: இளையராஜாவை வச்சு செஞ்ச சீனு ராமசாமி.. எப்பா! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

Ilaiyaraja: ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தன்னுடைய பாடல்களுக்காக கொண்டாடப்பட்டார் இளையராஜா. சமீப காலமாக அவர் செய்து வரும் ஒரு சில விஷயங்களால் மக்களிடையே அதீத அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். இதில் முக்கியமான விஷயம் பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடுவது.

அவர் இசையமைத்த பாடல்கள் அத்தனையுமே அழகுதான். அதை இனிவரும் காலங்களில் கொண்டாடுவது என்பது தமிழ் சினிமாவுக்கு பெருமையான ஒரு விஷயம். கண்டிப்பாக இளையராஜா இதுபோன்ற கொண்டாட்டங்களை ரசித்தே ஆக வேண்டும்.

25 வருடங்களுக்கு முன்பு வெளியான கண்மணி அன்போடு காதலன் பாடல் திடீரென டிரண்டாகி சின்ன குழந்தைகள் வரை பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு வரமெல்லாம் யாருக்கு அமையும். ஆனால் இளையராஜா இதை சரியாக உபயோகிக்காமல் தடுமாறுகிறாரோ என்ற சந்தேகம் இப்போது எழுந்து வருகிறது.

தன்னுடைய பாடல்களுக்கு உரிமை கொண்டாடுவது என்பதை இளையராஜா 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார். இதனால் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் இளையராஜாவுக்கும் இடையே மனஸ்தாபம் கூட ஏற்பட்டது.

ஆனால் அப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலகட்டம். இதனால் இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்படவில்லை. இப்போதைய காலகட்டம் என்பது யார் வேண்டுமானாலும் இணையதளத்தில் கருத்து சொல்லலாம் என்பது போன்ற காலகட்டம்.

இது மாதிரியான சூழலில் இளையராஜா மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்பி இருக்கிறார். இதனால் இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே கருத்து மோதல் ஏற்பட்டு அண்ணனுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் கங்கை அமரன் தேவையில்லாத வார்த்தைகளை விட்டு விட்டார்.

இளையராஜாவை வச்சு செஞ்ச சீனு ராமசாமி

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய கண்டனத்தை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் வைரமுத்துவை வளர விடக்கூடாது, அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று இளையராஜா நினைத்தார்.

இதனால் தன்னுடைய நிறைய நல்ல மெட்டுக்களுக்கு டம்மி லிரிக்ஸ் போட்டு பாடல்களை வெளியிட்டார். அதே நேரத்தில் வைரமுத்து நல்ல இசையமைப்பாளர்களுக்கு நல்ல நல்ல பாடல்களை கொடுத்து பெரிய பாடலாசிரியராக வளர்ந்து விட்டார்.

இது போன்ற ஒரு வளர்ச்சிக்கு உண்மையிலேயே இளையராஜா தான் காரணம் என வஞ்ச புகழ்ச்சி செய்திருக்கிறார். திறமை இருப்பவன் எங்க இருந்தாலும் பொழச்சிப்பான்னு சீனு ராமசாமி மறைமுகமாக சொல்லிவிட்டார்.

Trending News