செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

கருக்கலைப்புக்கு தடை, 95 வருடமா ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு.. இப்படியும் ஒரு காரணமா?

Vatican country: உலக நாடுகளில் மக்கள் தொகை பிரச்சினை என்பது பெரிய தலைவலியாக இருக்கிறது. ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் ஒரு வீட்டுக்கு இத்தனை குழந்தை தான் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து வருவதால் கண்டிப்பாக ஒரு வீட்டிற்கு இத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதோடு, அதற்கு தேவையான பொருளாதார செலவுகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

ஆண்களை விட குறைந்த பெண்கள் எண்ணிக்கை, பெண்களை விட குறைந்த ஆண்கள் எண்ணிக்கை என்று கூட பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாட்டில் ஒரு நூற்றாண்டை தொடும் நிலையிலும் குழந்தையே பிறக்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

95 வருடமா ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உண்மையாகவே இந்த நாட்டில் கடந்த 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் போப் ஆண்டு வரும் வாடிகன் தான் இந்த நாடு. உலக நாடுகளின் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்கள் இங்குதான் வசிக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் உலகில் இருக்கும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ குடும்பம் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி இந்த நாடு முழு சுதந்திர உரிமை பெற்றது. அதிலிருந்து இன்று வரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.

இந்த நாட்டில் குடியேற வேண்டும் என்றால் ஒன்று பாதிரியாராக இருக்க வேண்டும் இல்லை துறவியாக இருக்க வேண்டும். அவர்களுடைய பதவிக்காலம் இருக்கும் வரைக்கும் தான் இந்த நாட்டில் வசிக்க முடியும். இதனால் வாடிகன் நாட்டுக்கு நிரந்தர குடியுரிமை கிடையாது.

மேலும் இந்த நாட்டுக்கு மருத்துவமனை வசதி கேட்டுக் கூட அனுமதி கொடுக்கப்படவில்லை காரணம் இது ரொம்ப சின்ன நாடு அருகிலேயே பெரிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இருப்பதால்தான். இங்கு பெண்கள் தங்களுடைய பிரசவம் நெருங்கும் நேரத்தில் பக்கத்தில் உள்ள ரோமுக்கு சென்று தங்கிவிட வேண்டும்.

அங்குள்ள மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்கப்படும். ரோம் நாட்டின் குடியுரிமை அந்த குழந்தைக்கு கிடைக்கும். மேலும் இந்த நாட்டில் குழந்தை கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் 95 வருடங்களாக இந்த நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என சொல்லப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News