Vijay TV: ரசிகர்களின் எமோஷன்களை தூண்டி விட்டு அதன் மூலம் டிஆர்பி தேடுவதில் ஒரு சில சேனல்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸை சொல்லலாம்.
முதல் சீசனில் ஓவியா தற்கொலைக்கு முயன்றது, இரண்டாவது சீசனில் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியது, மூன்றாவது சீசனில் கவின் லாஸ்லியா காதல் என கண்டன்டுக்காக நிறைய விஷயங்கள் நடந்தது.
அந்த சீசன்கள் முடிந்த பிறகு இவர்கள் சாதாரணமாக பேசிக் கொள்வதை பார்க்கும் பொழுது அட நிகழ்ச்சியை பார்த்த நான் தான் முட்டாளா என தோன்றுகிறது. அப்படி ஒரு விஷயம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் நடந்திருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றி, அவருக்காக குரல் கொடுக்கும் பெண்ணாக அர்ச்சனாவை உள்ளே இறக்கி பயங்கரமான மைண்ட் கேம் விளையாடப்பட்டது. பூர்ணிமா மற்றும் மாயா என்ன பண்ணினாலும் கடைசி வரை நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அதேபோன்று நிக்சன் செய்த தவறான விஷயம் எதற்குமே நிகழ்ச்சி தரப்படும் இருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை. வினுஷா தேவி பற்றி நிக்சன் பேசியதை திரை இட்டு காட்டிய சேனல் அதற்கான நடவடிக்கை எடுத்ததா என்றால் நிச்சயமாக கிடையாது.
ரசிகர்களை முட்டாள் ஆக்குறீங்களே!
அந்த சமயத்தில் வினுஷாவுக்கு ரசிகர்களிடையே பயங்கர சப்போர்ட் இருந்தது. வினுஷாவை பற்றி தவறாக பேசிய நிக்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும், ரெக்கார்டு கொடுக்க வேண்டும் என மக்கள் புலம்பி தவித்தார்கள்.
வெளியில் இருந்து கொண்டு வினுஷா கூட நிக்சன் செய்த தவறுக்கு கமலஹாசன் குரல் எழுப்ப வேண்டும், விஜய் டிவி குரல் எழுப்ப வேண்டும் என உரிமை குரல் எழுப்பினார். கடைசியில் நிகழ்ச்சி முடிந்த ஆறு மாதத்தில் விஜய் டிவியின் ஒரு சீரியலில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சின்னத்திரை நடிகர் சித்தார்த், தமிழும் சரஸ்வதியும் சீரியலின் வில்லன் அர்ஜூன் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் பனி விழும் மலர்வனம் என்னும் சீரியலில் லீட் கேரக்டரில் வினுஷா நடிக்கிறார். அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு விஜய் டிவி பக்கமே வந்திருக்கக் கூடாது.
ஆனால் வந்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்வோம் என மீண்டும் சீரியலுக்கு திரும்பி விட்டார் பாரதி கண்ணம்மா. மொத்தத்தில் இவர்களுக்காக பொங்கும் ரசிகர்களின் நிலைமை தான் பாவம்.