செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

கெயில், சேவாக் நெருங்கியும் 20 வருடங்களாக தொட முடியாத சாதனை.. 2 இந்திய அதிரடி வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு

கிரிஷ் கெயில், விரேந்திர சேவாக் இவர்கள் இருவரும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் ஒரே மாதிரியாகத்தான் கையாளுவார்கள். 20 ஓவர், ஐம்பது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி என எதிலுமே பாகுபாடு பார்க்காமல் அதிரடி ஆட்டம் ஆடி பவுலர்களை துவம்சம் செய்வார்கள்.

இப்படி விளையாடி வந்த இவர்கள், இருவராலும் கூட ஒரு மகத்தான சாதனையை முறியடிக்க முடியவில்லைஇப்பொழுது இவர்கள் இரண்டு பேருமே இன்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்கள் அடிப்பதே பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அப்படி இருந்த காலகட்டத்தில் ஒரே போட்டியில் 400 ரன்கள் அடித்தார் பிரைன் லாரா.

2004 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரைன் லாரா 582 பந்துகளில் 43 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 400 ரன்கள் குவித்தார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று வரை ஒரு தனி நபரின் அதிகபட்ச ரன்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை முச்சதம் அடித்தும் வீரேந்திர சேவாக்கால் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. அவரைப் போலவே அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய க்ரிஷ் கெயில் கூட இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

2 இந்திய அதிரடி வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு

இவர்கள் இருவரும் நம் சாதனையை முறியடிப்பார்கள் என பிரைன் லாரா மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் கடைசிவரை நம்பிய அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது . இப்பொழுது அந்த 400 ரண்களை இரண்டு இந்திய வீரர்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்து வருகிறார்.

சுபம் கில் மற்றும் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் ஆகிய இந்த இரண்டு இளம் வீரர்களால் மட்டுமே தன்னுடைய 400 ரன் சாதனையை முறியடிக்க முடியும் என நம்புகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -spot_img

Trending News