வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இந்த வருடம் கோலிவுட்டை புரட்டி போட்ட 5 சம்பவங்கள்.. மாஸ் இந்தியன் தாத்தாவை தமாஸாக மாற்றிய 2k கிட்ஸ்

Indian 2: இந்த வருட தொடக்கத்தில் இருந்து பெரிய ஹீரோக்களின் படம் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் போட்டி போட்ட நிலையில் லால் சலாம், ரத்னம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

ஆனால் இவை அனைத்தும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதற்கு அடுத்ததாக அரண்மனை 4 வெளிவந்து ஆடியன்ஸை தியேட்டர் பக்கம் வர வைத்தது. அதற்கு அடுத்தபடியாக வெளியான கருடன், மகாராஜா உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தியது.

இருப்பினும் இந்த ஏழு மாத காலத்தில் தமிழ் சினிமாவில் நம்ப முடியாத பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதில் ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்ட ஐந்து சம்பவங்களை பற்றி இங்கு காண்போம்.

முதலாவதாக கடந்த சில வருடங்களாக சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை தழுவியது. அதை மாற்றும் விதமாக அரண்மனை 4 மூலம் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து விட்டார். ஆனால் இந்த தரமான வெற்றிக்கு அரண்மனை 4 பட நாயகிகளின் கிளாமர் ஆட்டமும் ஒரு காரணம்.

அடுத்ததாக நாம் காமெடியனாக இதுவரை பார்த்து ரசித்த சூரி தற்போது ஹீரோவாக தன்னை நிரூபித்துள்ளார். ஏற்கனவே விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்த அவரை மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

ஹீரோவாக ஜெயித்த சூரி

ஆனால் அதைத் தாண்டி கருடன் படத்தில் அவருடைய நடிப்பு ஹீரோவாக மேலும் மெருகேறி இருக்கிறது. அடுத்ததாக மகாராஜா படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுத்து நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சிங்கம் புலி.

இயக்குனராக காமெடியனாக இருந்த இவர் இந்த வருடம் வில்லனாகவும் மாறியுள்ளார். இதற்கு அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என நாம் கொண்டாடிய ஷங்கர் இன்னும் பழைய பஞ்சாங்கமாக இருக்கிறார் என இந்தியன் 2 படத்தால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சி தான். அதனால் தன் அடுத்த படமான கேம் சேஞ்சர் மூலம் இதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். அடுத்து 90 காலகட்டத்தில் நாம் மாஸாக கொண்டாடிய இந்தியன் தாத்தா 2k கிட்ஸ்களால் தமாஸாக மாறியிருக்கிறார்.

இதனால் கமல் இப்போது சோசியல் மீடியா ட்ரோல் மெட்டீரியல் ஆகவும் மாறியுள்ளார். இது இந்த வருடத்தின் எதிர்பாராத சம்பவம் ஆகும். அது மட்டும் இன்றி கல்கி படத்தில் சுப்ரீம் யாஸ்கின் என்ற வில்லனாக அவர் தோன்றியதும் இந்த வருடத்தின் அடுத்த சம்பவம்.

இப்படியாக இந்த ஐந்து சம்பவங்களை தாண்டி விஜய் சினிமாவுக்கு குட்பை சொல்லப்போவது, அம்பானி வீட்டு திருமண விழாவுக்கு சென்ற ரஜினியை நெட்டிசன்கள் வச்சி செய்தது என ஏகப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றது. இந்த வருடம் முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியன் தாத்தாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Trending News