Kanguvaa: நடிகர் சூர்யாவின் சமீபத்திய பேச்சு அவருடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய்க்கு பிறகு அடுத்த மாஸ் ஹீரோ என்றால் அது சூர்யா தான்.
அதுவும் விஜய் சினிமாவை விட்டு விலகிக் கொள்ள இருக்கும் நிலையில் அந்த இடத்தை சூர்யா தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் பெரிய ஆசை. ஆனால் சூர்யாவை கடைசியாக திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கேரக்டரில் பண்ணி இருந்தார். இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக அவருடைய ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள். அவ்வப்போது ரிலீஸ் தேதி வெளியானாலும் எதுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டை படம் ரிலீஸ் ஆகும் அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியானது.
ரிலீசாக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைந்தது. வெற்றியோ தோல்வியோ ரஜினியுடன் சூர்யா மோதி பார்க்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் நேற்று மெய்யழகன் பட விழாவில் கலந்து கொண்ட சூர்யா இந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் சினிமாவில் மூத்தவர், அவர் நான் பிறந்ததிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ. எனவே அக்டோபர் 10ஆம் தேதி அவருடைய படம் ரிலீஸ் ஆவது தான் சரி. அந்த படத்துடன் நாங்கள் மோதவில்லை. கங்குவா படம் எப்போ ரிலீஸ் ஆகிறது அதுதான் அந்த படத்தின் பிறந்தநாள்.
கிட்டதட்ட 1000 பேரின் கடுமையான உழைப்பு தான் இந்த படம். கங்குவா படம் வெற்றி பெற வேண்டும் என எல்லோரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என சர்ச்சைக்கு. வைத்து விட்டார் சூர்யா.
சூர்யாவுக்கு கைகொடுக்கும் கங்குவா
- சூர்யாவுக்கு நடந்த விபத்து, பாதியில் நின்ற படப்பிடிப்பு
- சூர்யா உரண்ட இழுத்த அடுத்த இயக்குனர்
- உலக சினிமாவை மெய்சிலிர்க்க செய்த கங்குவா