சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

எதிர்நீச்சல் சீரியலை மறக்கடிக்க செய்த சன் டிவியின் புத்தம் புது சீரியல்.. கதாநாயகன் சான்சை மிஸ் பண்ணிய சக்தி

Sun Tv Serial: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த அளவிற்கு நாடகத்தின் கதையும், ஆர்டிஸ்ட்களின் நடிப்பும் பார்ப்பவர்களை கவர்ந்தது. ஆனால் ஒரிஜினல் குணசேகரன் இல்லாததால் தொடர்ந்து நாடகத்தை கொண்டு போக முடியாமல் அவசர அவசரமாக பாதியிலேயே முடித்து விட்டார்கள்.

இந்நிலையில் எப்பொழுது இரண்டாம் பாகம் அல்லது மறுபடியும் இந்த மாதிரி ஒரு கதையுடன் திருச்செல்வம் வருவார் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது எதிர்நீச்சல் சீரியலை மறக்கடிக்கும் விதமாக புத்தம் புது சீரியல் மக்களை கவர்ந்து விட்டது. அதிலும் வந்த வேகத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து இந்த நாடகத்தை நாங்கள் ஒரு நாளும் மிஸ் பண்ணாமல் பார்த்து வருகிறோம்.

வந்த வேகத்திலேயே தூள் கிளப்பும் சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இதுதான் பெஸ்ட் ஸ்டோரி என்று மக்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அப்படி வந்த வேகத்திலேயே தூள் கிளப்பும் சீரியல் எதுவென்றால் மூன்று முடிச்சு. இதில் நந்தினி மற்றும் சூர்யா எதார்த்தமான நடிப்புடன் பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

தற்போது இவர்களுடைய ஜோடிக்காகவே இந்த நாடகமும் கதையும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் நந்தினியின் துணிச்சலான பேச்சும், தைரியமான முடிவையும் பார்த்து ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

எப்ப பார்த்தாலும் அழுது கொண்டு மற்றவர்கள் என்ன சொன்னாலும் மக்கு மாறி முழித்துக் கொண்டிருக்கும் ஹீரோயினுக்கு நந்தினி தான் ரோல் மாடல் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டார்.

அதே மாதிரி சூர்யாவின் நடிப்பு நந்தினிக்கு ஏற்ற மாதிரியாக ஈடு கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் இவருக்கு பதிலாக கதாநாயகனாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த சக்திதான் கமிட்டாக இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் செய்திகள் வந்தது. ஆனால் தேடி வந்த நல்ல வாய்ப்பை சக்தி மிஸ் பண்ணி விட்டார். எது எப்படியோ தற்போது மக்களின் பேவரைட் சீரியலாக மூன்று முடிச்சு சீரியல் இடம் பிடித்து விட்டது.

Trending News