Bigg Boss 8: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ஒற்றை வரியை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்ட ஷோதான் பிக் பாஸ். போட்டியாளர்கள் எந்த அளவுக்கு சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு தான் இந்த நிகழ்ச்சிக்கு மவுசு.
சேனலை குறை சொல்லியும் ஒன்னும் இல்லை, மக்களும் இதை தான் இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்க்கிறார்கள். போட்டியாளர்களை அழைத்து வந்து ஆடி பாடிய சந்தோஷமாக இருங்கள், அன்பு இல்லத்தை உருவாக்குங்கள் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆள் இல்லை பிக் பாஸ்.
தன்னால் முடிந்த வரை நாரதர் வேலையை பார்த்து குழாயடி சண்டையை ஏற்படுத்தி விடுவார். முதல் சீசனை ஒப்பிடும்போது அடுத்தடுத்து சீசன்களின் போட்டியாளர்கள் ரொம்பவே உஷாராக ஆரம்பித்தார்கள். நாலா பக்கமும் கேமரா இருக்குது, எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
உள்ளே நுழையும் பொழுதே இதற்கு முந்தைய போட்டியாளர்களைப் போல் இருக்கக் கூடாது தன்னை ஒரு அன்னை தெரசா போல் காட்டிக் கொள்ள வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ பேர் கேட்டாலும் பரவாயில்லை கண்டன்டு கொடுத்து 100 நாட்கள் உள்ளே இருந்து சம்பாதித்து விட வேண்டும் என வருகிறார்கள்.
குட்டையை குழப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்
இவர்கள் மாறி மாறி போடும் வேஷம் மக்களுக்கு எது உண்மை, எது பொய் என நம்ப முடியாமல் இருக்கிறது. சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் அப்டேட் ஆகி வருவது போல் பிக் பாஸ் கூட அப்டேட் ஆகி விட்டார்.
குரூப்பிசம் உருவாக்கினால் கண்டிப்பாக மக்களின் நன்மதிப்பில் இடம்பெற முடியாது, எல்லோருக்கும் பொதுவான ஆளாக இருக்க வேண்டும் என நினைத்து பல போட்டியாளர்களும் இந்த சீசனுக்குள் வந்தார்கள். ஆனால் பிக் பாஸ் அவர்களை விட பெரிய திட்டத்தை இந்த சீசனுக்காக வைத்திருந்தார்.
நீங்க என்ன குரூப் பிரிக்கிறது, அந்த வேலையை நானே பார்த்து விடுகிறேன் என, உள்ளே நுழையும் போதே ஆண்கள் தனி, பெண்கள் தனி என இந்த விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்.
எப்படி பார்த்தாலும் ஆண்கள் ஒரு குழுக்களாக பிரிந்து தான் விளையாட வேண்டும். பெண்கள் ஒரு குழுக்களாக பிரிந்து தான் விளையாட வேண்டும். தன்னுடைய குழு ஜெயிப்பதற்காக எல்லா தில்லாலங்கடி வேலையும் செய்யத்தான் வேண்டும். குட்டையை குழப்பிவிட்டு கலங்கிய நீரில் மீன்பிடிக்க பார்க்கிறார் பிக் பாஸ்.