புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

நல்ல திறமை இருந்தும் அதிர்ஷ்டமே இல்லாத வீரர்.. ஊட்டி வளர்த்தும் மோசம் போன ராகுல் டிராவிட்

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். இவர் தலைமையின் கீழ் இந்திய அணி அசுர வளர்ச்சி அடைந்தது. பல இளம் வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கி தந்தவர் டிராவிட்.

நவம்பர் 2021 இல் இருந்து 2024 வரை இந்திய அணிக்கு நல்ல காலம் என்று சொல்லலாம். கே எல் ராகுலில் ஆரம்பித்து இன்று இசான் கிஷான், சுப்மன் கில் வரை பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கண்டுபிடித்து கொடுத்தவர் ராகுல் டிராவிட். இப்பொழுது இந்த இளம் படையினர் இந்திய அணியில் வேற லெவலில் செயல்பட்டு வருகின்றனர்.

ஊட்டி வளர்த்தும் மோசம் போன ராகுல் டிராவிட்

டிராவிட் இருக்கும் வரை ஒரு வீரர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து வந்தார். அந்த வீரரும் நல்ல தொடக்கத்தை தருவார் ஆனால் பொசுக்கென்று அவுட் ஆகி விடுவார். இப்படி இவருக்கு எந்த ஒரு போட்டியிலும் அதிர்ஷ்டமே இருக்காது. இப்பொழுதும் அவர் திறமையை நம்பி இந்திய அணியில் அவருக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். இளம் வீரர் என்பதனாலும், நல்ல அதிரடி ஆட்டம் ஆட கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதாலும் இதுவரை அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இருபது ஓவர் போட்டியில் தொடக்க வீரராக விளையாடி வருபவர் சஞ்சு சாம்சன். இவர்தான் டிராவிட் கண்டெடுத்த அதிரடி ஆட்டக்காரர். இவருக்கு ராகுல் ட்ராவிட் காலத்திலேயே பல போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது . நல்ல திறமை, அதிரடி ஆட்டம், வேகப்பந்து, ஸ்பின் என பந்துகளையும் எதிர்கொள்ளும் விதம் எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கும் சாம்சன் நிலைத்து நின்று விளையாடுவதில்லை. 15 முதல் 20 ரன்கள் அடிக்கிறார் ஆனால் 6 முதல் 7பந்துகள் தான் சந்திக்கிறார்.

இப்படி அவசரப்பட்டு ஆடுவதால் அவரது விக்கெட் எளிதாக விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டமும் அவருக்கு கை கூடி வருவதில்லை. இப்பொழுது பங்களாதேஷ் தொடரில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலைமை நீடித்தால் ராகுல் டிராவிட்டின் செல்ல பிள்ளைக்கு இந்திய அணியில் வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

- Advertisement -spot_img

Trending News