தன் படத்தின் ஸ்பாய்லர் வெளியிட்ட சினிமா விமர்சகருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து தக் லைஃப் பட நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பல திறமையான நடிகர்கள் உள்ள நிலையில் அவர்கள் தமிழ் சினிமாவில் தலைகாட்டுவது வழக்கம். அந்த வகையில், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஜோஜு ஜார்ஜ்.
இவர் தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிது வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில். கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வெளியான பனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறியப்பட்டார். இப்படத்தில் சாகர் சூர்யா, ஸ்ரீதரன், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இப்படம் பற்றி எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டதற்காக ஜோஜூ ஜார்ஜ் போனில் அழைத்து மிரட்டியதாக சினிமா விமர்சகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது மலையாள சினிமா வாட்டாரத்திலும் மீடியாலும் பேசுபொருளானது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய ஜோஜு ஜார்ஜ் தொலைபேசியில் தொடர்புகொண்டு சினிமா விமர்சகரிடம் பேசியதை ஒப்புக் கொண்டு அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டு பற்றி ஜோஜு ஜார்ஜ் விளக்கம்
அதில், ’’ஒரு சினிமாவின் வெற்றிக்குப் பின் பலரது கூட்டு உழைப்பும், முயற்சியும் உள்ளது. நான் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவன் கிடையாது. ஒரு படம் பற்றி விமர்சிக்க சினிமா விமர்சகர்களுக்கு முழு உரிமையுள்ளது. இதற்கு முன்பு பல படங்கள் விமர்சனம் செய்யப்பட்டன. அதேபோல் நான் யாரிடமும் இதற்கு முன் போனில் அழைத்து பேசியதில்லை. இவ்விவகாரத்தில், பனி படத்தின் ஸ்பாயிலரை விமர்சகர் வெளியிட்டுள்ளார்.
அதை பல சமூக வலைதளங்கிலும் வெளியிட்டு, படத்தை இழிவு செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார். இப்படத்தை எடுக்க 2 ஆண்டுகள் ஆனது. பலருடைய உழைப்பும் இதில் அடங்கியுள்ளது. இப்படத்திற்காக நான் பல கோடிகள் முதலீடுகள் செய்திருக்கிறேன். இவ்விடத்தை அடைய பல தடைகளை தாண்டி வந்திருக்கிறேன். அப்படியிருக்க, ஒருவர் தன் சுய நலனுக்காக, மற்றவர்களை இழிவு செய்வதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது? அவருக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?
பெரிய பட்ஜெட் படமோ அல்லது சின்ன படமோ எதுவாக இருந்தாலும் அனைவரும் கஷ்டப்பட்டு படமெடுத்து அதை வெளியிடும்போது, ஏன் சினிமா விமர்சகர்கள் பலரும் அவதூறு பரப்பி, அப்படத்தின் ஸ்பாயிலர்களை வெளியிட வேண்டும்? என ரசிகர்கள் நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு ஆதரவாகவும் மற்ற நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஆதரவாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.