வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Test Championship ஃபைனல் போக.. இந்திய அணிக்கு இருக்கும் பெரிய சவால் இதுதான்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.

சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இழந்த சோக முகத்துடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியிலும், 2வது போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது. ஒரு பேச்சுக்கு 3 வது போட்டியிலாவது ஜெயித்து ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் நினைத்தபோது, அதிலும் தோற்று வாஸ் அவுட் ஆனது.

மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் கொண்ட அணியாக இருந்த போதிலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு விமர்சனம் குவிந்து வருகிறது. இத்தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 3 வது இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 5417 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.

எனவே முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கனவில் உள்ளன. இந்த நிலையில், பலம் வாய்ந்த அணியாக இருந்த இந்திய அணி நியூசிலாந்திடம் வீழ்ந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னேற சிக்கல் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்

அதன்படி, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4- 1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி சிக்கல் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதில்லாமல், இந்தியா 3 – 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால்கூட மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கும் சூழல் வரும்.

எனவே டி-20 உலகக் கோப்பையில் கோப்பை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிக் கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News