Thalapathy Vijay: தளபதி விஜய் சமீபத்தில் நடந்த தன்னுடைய கட்சி மாநாட்டில் நான் டீசன்டாக அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்ற வார்த்தையை சொன்னார். அதற்கு முழு அர்த்தமும் இன்று தான் நம்மில் பலருக்கும் புரிந்திருக்கும்.
ஒரு ட்வீட் மூலம் தன்னுடைய நோக்கத்தை தெளிவாக சொல்லிவிட்டார் விஜய். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பிக்கும் போது அவருக்கு ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக தான் அதிக நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயை பற்றி பேசினால் நம் மீதான மரியாதை குறைந்து விடும் என திமுக முன்னமே முடிவு செய்துவிட்டது. எங்களுடைய இலக்கு திமுக தான் என உறுதியாக இருக்கிறது அதிமுக. இதற்கிடையில் மாநாடு நடப்பதற்கு முன்பு வரை என்னுடைய தம்பி, என் தம்பிக்காக நான் நிற்பேன், அண்ணனை தேடி தம்பி வரவேண்டும் என அறைகூவல் போட்டுக் கொண்டிருந்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
மாநாடு முடிந்த பிறகு பெரிய அளவில் விஜய் சந்தித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சீமானிடம் இருந்துதான். ஒரு அரசியல் தலைவர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சிக்க கூடாதோ அதை மீறி சீமான் பேசியிருந்தார். இது எதற்குமே விஜய் தரப்பில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமானின் விமர்சனங்களுக்கு எந்த விதத்திலும் பதில் கொடுக்க கூடாது என விஜய் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தளபதி போட்ட ட்வீட்
இந்த நிலையில் இன்று விஜய் சீமானுக்கு தன்னுடைய எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில் சீமானுடைய பிறந்தநாள் இன்று என்பதால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
சீமானின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எந்த பதிலும் கொடுக்காத விஜய் பிறந்தநாளுக்கு தரமாக ஒரு சம்பவம் பண்ணி விட்டார். தற்போது சீமானின் ரெஸ்பான்ஸ் இதற்கு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.