ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

உச்சக்கட்ட கோபம், டென்சனாக்கிய தயாரிப்பாளர்.. ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிய கமல்

சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அந்த சினிமாவில் தன் சிறு வயது முதல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து அதில் பயணித்து வருபவர் கமல்ஹாசன். தன்னை வளர்த்துவிட்ட சினிமாவுக்காக, தன் மூலம் சம்பாதித்த பணத்தை திரும்ப அதிலேயே முதலீடு செய்யும் ஒரே நடிகராக கமல் அறியப்படுகிறார்.

மற்றவர்கள் செய்ய தயங்கிய விசயத்தை, ஹாலிவுட்டில் உள்ளவற்றை, புதிய தொழில் நுட்பங்கள் என சகலத்தையும் கற்றுக் கொண்டு சினிமாவில் உலக நாயகனாக அவர் ஜொலித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி அன்றிலிருந்து இன்று வரை அவர் ஹீரோவாக இருப்பதுடன் அவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் போட்டியாளராகவே இருப்பதாக சினிமா விமர்கர்கள் கூறுகின்றனர்.

அதற்கேற்ப, மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் தக்லைப் படத்தின் போஸ்டர் புரடக்சன் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று கமலின் பிறந்த நாளை முன்னிட்டு டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கமல் சில ஆண்டுகளுக்கு முன் வரை அவர் எடுத்த படங்களும், நடித்த படங்களும் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் கொடுத்ததாக சினிமா விமர்சகர்கள் கூறினர். ஆனால், லோகேஷ்- கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் 400 கோடிக்கு மேல் வசூலீட்டியது. தக்லைஃப் தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. எனவே கமல் சினிமாவில் இழந்ததை இனிமேல் மீட்கப் போகிறார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர் கமல்ஹாசன் என்று பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

கமல் பற்றி விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளதாவது;

இதுகுறித்து அவர் கூறியதாவது; “சினிமாவில் விஜயகாந்துக்குப் பிறகு தொழிலளார்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் கமல், இது அவரது அனைத்துப் படங்களிலும் நடந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆளவந்தான் பட ஷூட்டிங், மறைமலை நகரில் நடந்தபோது, ஒரு சண்டைக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மே மாத வெயில்.ஒரு ஷாட் இடைவெளியில் நிழல் தேடிய கேமராமேன், விக்ரம் தர்மா ஃபைட் மாஸ்டர், ஸ்டண்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் வெயிலில் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு போய்விட்டனர்.

அன்று மதிய இடைவேளையில் யாரிடமும் சொல்லாமல் கேரவனில் இருந்து இறங்கிப்போய்விட்டார் கமல். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி அவர் வரமாட்டார் என ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டனர். அதன்பின் படக்குழுவும் திரும்பிவிட்டனர்.

இதுகுறித்து படக்குழு விசாரித்தபோது, ஷூட்டிங்கின் போது நடந்ததை பார்த்த கமல், சித்திரை மாத வெயிலில், கட்டாயம் எலக்ட்ரான் பாக்கெட் குளுகோஷ், இளநீர் இதெல்லாம் கொடுக்க வேண்டும் என்று முதலிலேயே தயாரிப்பாளரிடம் கூறியதை அவர்கள் கேட்கவில்லையாம். அதேபோல், நடிகர், இயக்குனர், உதவியாளர், டெக்னீஷியன்களுக்கு என தனித் தனி வகை சாப்பாடு ஒதுக்கப்பட்டதை பார்த்து கோபத்தில் ஷூட்டிங்கை அவர் கேன்சல் செய்ததாக தெரியவந்தது.

கர்வம் இருப்பினும் மனிதாபிமானம் உள்ளவர் கமல்

ஆனால் இது தயாரிப்பாளர் தாணுக்குவும் தெரியாதாம். ஷீட்டிங்கில் இருந்த நிர்வாகிகள்தான் புரடக்சன் விஷயத்தில் செலவை குறைக்க சொதப்பியதாக கூறப்படுகிறது. அதன்பின் தாணு நேரடியாக கமலிடம் சென்று கேட்டதற்கு ‘கோடை வெயிலில் தொழிலாளர்களுக்கு ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும்’ என்று கூறி, தயாரிப்பாளர் ஓகே சொன்ன பிறகுதான், மீண்டும் ஆளவந்தான் ஷூட்டிங்கு கமல் வந்ததார். அவர் மனிதாபிமானம் உள்ளவர்’’ என தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News