வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமல், மணிரத்தினத்தால் உருளும் சிம்புவின் தலை.. வம்பு தும்புக்கு போகாமல் முழிக்கும் மோசமான அப்ராணி

தக் லைப் படம் முழுவதுமாக சூட்டிங் முடிந்து விட்டது. இப்பொழுது அந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் மணிரத்தினத்தின் ரசிகர்கள். இது ஒரு புறம் இருக்க கமல் மற்றும் மணிரத்னத்தால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த படம் 2025 ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த தேதியும் உறுதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே ஏப்ரல் 10 வெளியீடு என ஒரு டீசர் வீடியோவும், ஜூன் 5ஆம் தேதி வெளியீடு என இரண்டு டீசர் வீடியோக்கள் ரெடி பண்ணி வைத்துள்ளது பட குழு..

இப்பொழுது அதிகாரபூர்வமாக தக் லைப் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியீடு என டீசர் வந்துள்ளது. இதற்கு காரணம் கமல் மற்றும் மணிரத்னம் தான் என்கிறார்கள். ஏற்கனவே சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு நடிப்பில் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது அதனால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் பெரிய பகுத்தறிவு பகலவர்களாக மாறியுள்ளனர். ஓவராக சென்டிமென்ட் பார்த்து இந்த படத்தை ஜவ் மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டே போகிறார்கள். கமல் மற்றும் லோகேஷ் இணைந்து மிரட்டிய விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசானது.

இப்பொழுது சென்டிமென்ட்டாக இந்த தக் லைப் படத்தையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டால் செம ஹிட் அடித்து விடும் என ஒரு நப்பாசையில் இருக்கிறார்கள் மணிரத்னமும் கமலும். இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு நடித்து வந்த சிம்புவின் நிலைமை தான் இப்பொழுது மோசமாக உள்ளது. எப்பையா இந்த படத்தை வெளியிடுவீங்க என மண்டை காய்ந்து காத்திருக்கிறார் சிம்பு.

Trending News