Thalapathy Vijay: ‘ ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ இந்த ஒரு வார்த்தை தான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டிருக்கிறது. கூட்டணி கட்சிகளின் வியூகம் மற்றும் பெரிய கட்சிகளின் நடுக்கம் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய் ஆரம்பித்து இருக்கும் கட்சி முதல் மாநாடு நடந்து முடிந்த பிறகு ஒட்டுமொத்த அரசியல் புள்ளிகளின் பார்வையும் திரும்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது தான். இதற்கு காரணம் இந்த மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நோக்கம் விசிக கட்சிக்கு இருப்பது தெரியவந்தது.
அடடே! இதுதான் சங்கதியா?
இருந்தாலும் இந்த உட்கட்சி பூசலை சமாளித்து ஆளும் திமுகவுடன் தனக்கு சமூகமான உறவு இருப்பதாக திருமாவளவன் காட்டிக் கொண்டார். மேலும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாடு முடிந்த கையோடு விஜய் மீது சில வசவுகளையும் வைத்தார்.
இது ஒரு புறம் இருக்க டிசம்பர் மாதம் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் ஒரே மேடையில் சந்தித்தால் என்னவாகும் என்ற பெரிய வியப்பு தொற்றிக் கொண்டது.
ஆனால் திருமாவளவன் இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சொல்லியிருந்தார். இது குறித்து வலைப்பேச்சு சேனல் பிஸ்மி பிரபல தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய கொள்கை கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணான முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரடியாக சந்தித்தவர் திருமாவளவன். அப்படி இருக்கும்போது விஜயை சந்திப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்.
திமுக கண்ணசைப்பதற்கு வாய் அசைப்பவராக திருமாவளவன் இருக்கிறார். தி.மு.க கட்சி இடம் இருந்து ஏதோ ஒரு நன்மையான விஷயம் திருமாவளவனுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பதால் தான் அவர் அந்த கட்சியில் இருந்து வெளிவர பயப்படுகிறார்.
விஜய் மீது வசை பாடியதும் திமுக திருப்திக்காகத்தான் என சொல்லி இருக்கிறார். இருந்தாலும் இன்று தான் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக திருமாவளவன் அறிவித்திருக்கிறார். மேலும் திமுக கட்சி உடன் தான் தன்னுடைய கூட்டணி தொடரும் எனவும் அழுத்தம் திருத்தமாக பேசி இருக்கிறார்.