Thalapathy Vijay: பிள்ளை பிறப்பதற்கு முன்னாடியே பேர் வைக்கிறது என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதைத்தான் தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். உங்களை நம்பி உங்கள் விஜய்யாக வந்திருக்கிறேன் என விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் தன் முன்னால் குழுமி இருக்கும் லட்சக்கணக்கான மக்களை பார்த்து சொன்னார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அதை உதறித் தள்ளி விட்டு மக்களுக்கு சேவை செய்ய முன் வந்திருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். தன்னுடைய ஒட்டு மொத்த ரசிகர்களும் தனக்காக தோள் கொடுப்பார்கள் என நம்பிக்கையோடு இறங்கி இருக்கிறார்.
ஆனால் இன்று தூத்துக்குடியில் நடந்த சம்பவம் நடிகர் விஜய் யோசிக்கும் அளவுக்கு இருக்கிறது. குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை ஒட்டி தூத்துக்குடியில் உள்ள அவருடைய சிலைக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர் இரண்டு குழுக்களாக வந்திருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வரத்துக்கு முன்னாடியே பதவிக்கு சண்டை
முதலில் பாலா என்பவரின் குழு மேலே ஏறி சிலைக்கு மாலை இட்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் தலைமையில் மாலையுடன் ஒரு குழு வந்தபோதும், பாலா குழுவை சேர்ந்தவர்கள் கீழே இறங்காமல் தொடர்ந்து கோஷமிட்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் போலீசார் உதவியுடன் பாலா குழுவை சேர்ந்தவர்களை கீழே இறக்கி இருக்கிறார்கள். இருந்தும் அஜிதா ஆக்னல் குழுவை சேர்ந்தவர்கள் மாலை போடுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாலா குழு செயல்பட்டதோடு இரண்டு குழுக்களும் மாற்றி மாற்றி கோஷமிட்டு இருக்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர் பாலா வாழ்க என கீழே நின்று கொண்டு கத்தி கோஷமிட்டிருக்கிறார்கள். கட்சியில் இதுவரை எந்த பொறுப்புமே கொடுக்காத நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கு இரண்டு குழுக்கள் இடையே போட்டி நடைபெற்று வருவது அப்பட்டமாக தெரிகிறது. தலைவனே சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று சொல்லும்போது தொண்டர்கள் பதவிக்காக போராடுவது நியாயமானதாக இல்லை.
தொடக்கத்திலேயே இப்படி கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால், அதை மற்ற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. தொண்டர்களை நம்பி களம் இறங்கி இருக்கும் விஜயை யோசித்துப் பார்த்தாவது இவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.