மரியாதை இல்லாட்டி நா அவுங்க கூட இருக்க மாட்டேன்.. சிவகார்த்திகேயன் நச் பதில்.. யாரை இப்படி சொல்லாரு?

விஜய் டிவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, இன்று வெள்ளித்திரையில் ஹீரோவாக ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன் படிப்படியாக வளர்ந்து இந்த இடத்தில் உள்ளார்.

ஆரம்பத்தில் மெரினா, மனம் கொத்திப் பறவை, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் நடித்த அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். அதன்பின், ரஜினி முருகன், டாக்டர், டான் ஆகிய படங்களில் அடுத்டுத்து முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தார்.

பிரியன்ஸ் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், மாவீரன், அயலான் ஆகிய 2 படங்களை அடுத்து சமீபத்தில் வெளியான அமரன் படமும் வெற்றி பெற்றதால் ஹேட்ரிக் வெற்றி கொடுத்ததில் மகிழ்ச்சியில் உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீசான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவாவின் கேரியரில் பெரிய ஓபனிங் கொடுத்த படமாகவும், உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனக்கு அந்த சேனலில் மரியாதை இருந்தது – சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சுயமரியாதை என்றால் என்ன? அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதில், என்னை மனிதனாக நடத்துவது சுயமரியாதை தான். இதை நான் அப்படித்தான் பார்க்கிறேன். இங்கு எல்லோருமே மனிதர்கள்தான்.

நான் மனிதாக இருப்பது மாதிரி நீங்களும் மனிதர் தான். முதலில் அதற்கான இடத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் வேலையப் பற்றிப் பேச வேண்டும். நான் விஜய் தொலைக்காட்சியில் இருந்தபோது இந்த மரியாதை எனக்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்போது சேனலில் பெரிதாக வருமானம் இல்லை. குறைவான சம்பளம்தான். ஆனால் எனக்கான தளம் மற்றும் மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு நான் வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தது எனக்கு. இதையும் தாண்டி அவர்கள் எனக்கு மரியாதை கொடுத்தார்கள். அந்த மரியாதையை மற்றவர்கள் எனக்கு கொடுக்கவில்லை என்றால் அவர்களுடன் நான் இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சிவா யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, சுயமரியாதை இது எல்லோருக்குமே வேண்டும். அந்த மரியாதை உள்ளதால்தான் சிவா இன்று ஹீரோவாகி ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் அவரது பேச்சிற்கு கருத்துகள் கூறி வருகின்றனர்.

Leave a Comment