Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடு முழுக்க கருணாகரன், அன்பு மற்றும் ஆனந்தி கம்பெனிக்குள் வரக்கூடாது என்பதற்காக நடத்திய போராட்டமே பெரியதாக இருந்தது.
அன்பு ஆனந்தி வர தான் செய்வார்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் கம்பெனியை விட்டு வெளியே போங்க என மகேஷ் சொல்லிவிட்டான். தில்லைநாதன் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த மாதிரி பிரச்சனை பண்ண வேண்டாம் என மித்ரா சொல்கிறாள்.
உடனே கருணாகரன் தில்லை சார் இல்லனா என்ன அதான் போர்ட் மெம்பரா அவங்க பொண்டாட்டி இருக்காங்களே அவங்க வந்து இந்த பிரச்சனைக்கு முடிவு சொல்லட்டும் என்கிறார். மகேஷின் அம்மாவும் இந்த பிரச்சனைக்காக கம்பெனிக்கு வருகிறார்.
அன்பு தலையில் இடியாய் இறங்கும் ஆனந்தியின் கர்ப்பம்
ஆரம்பத்தில் கருணாகரனுக்காக கொஞ்சம் சப்போர்ட் பண்ணிய மகேஷின் அம்மா அதன் பின்னர் என்னதான் இவங்க இவ்வளவு தப்பு செஞ்சி இருந்தாலும் வேலை விட்டு அனுப்புவது என்பது முடியாத விஷயம். நீங்க ஆனந்தியின் பொருளை மகேஷ் சொல்லி இருந்தாலும், எரிக்க முயற்சி செய்திருக்கக் கூடாது கருணாகரன் என்று சொல்கிறார்.
மேலும் கருணாகரனை தாக்கியதற்காக ஆனந்தியை கருணாகரனிடம் மன்னிப்பு கேட்க சொல்வதோடு நேற்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் அப்பா குடுகுடுப்பைக்காரன் சொன்னதைப் பற்றி ரொம்ப யோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனந்தியின் அக்கா திருமணத்தில் முதலில் வேலுவால் ஏற்பட்ட பிரச்சனை போல் மீண்டும் உடன்பிறப்பால் பிரச்சனை வரப்போகிறது என ஜோசியர் சொல்கிறார். அதே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்தி எங்கோ வெளியே செல்ல கிளம்பி கொண்டிருக்கும்போது திடீரென ஆனந்தி வாந்தி எடுப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை சேர்த்து வைத்துவிட்டு இயக்குனர் மீண்டும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போல் காட்டுவது கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வேலை ஆனந்தி கர்ப்பமாக இருந்தால் இந்த விஷயத்தை அன்பு எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை.
அதே நேரத்தில் மகேஷ் தான் இதற்கு காரணம் என மித்ரா வாயை திறந்து உண்மையை சொல்வாளா என்றும் தெரியவில்லை. ஆனந்தி உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக மகேஷுக்கு தான் ஆனந்தி என்பது உறுதியான விஷயம். அப்படி இருக்கும்போது சம்பந்தமில்லாமல் அன்புவை ஆனந்தியுடன் கோர்த்து வைத்துக் காட்டுவது இப்போது ரசிகர்களுக்கு ஒரு வித அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.