Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இருக்கிறார் சிவாஜி தேவ் என்னும் சிவகுமார். சாச்சனா குறைந்த ஓட்டுகளை பெற்றிருந்த போதிலும் அவரை வெளிய அனுப்பாமல் சிவகுமாரை வெளியே அனுப்பி விட்டார்கள் என்பதன் மூலம் தான் இவர் பிரபலமானார்.
பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட சுஜா வருணியின் காதல் கணவர் தான் சிவகுமார். சிவாஜி தேவ் என்னும் பெயரில் சிங்கக்குட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
யார் இந்த சிவகுமார்?
அதன் பின்னர் இயக்குனர் பாலு மகேந்திரா உடன் இணைந்து பயணித்தார். சிவகுமார் ஒரு சிறந்த நாடக நடிகர். இதைத் தாண்டி இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என சொல்லப்படுகிறது. சுஜா வருணியை திருமணம் செய்து கொள்ளும் போது தான் இவர் சிவாஜியின் பேரன் என்பது நம்மில் பலருக்கு தெரியும்.
இந்த திருமணத்தில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுஜாவை திருமணம் செய்து கொள்வது அவருடைய அப்பாவுக்கு பிடிக்காததால் தான் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் வெளிவந்த உண்மைதான் ராம்குமாரின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர் தான் சிவகுமார். சிவகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா மீனம்மாவை அதிகம் மிஸ் செய்வதாக அவ்வப்போது போஸ்டர்கள் போடுவார்.
இவர் நடிகை ஸ்ரீபிரியாவின் உடன் பிறந்த சகோதரி. தன் சகோதரி இல்லாததால் தன்னுடைய சகோதரி மகனை தன்மகன் போலவே பாவித்து வருகிறார் நடிகை ஸ்ரீபிரியா. சிவக்குமார் அவ்வப்போது தன்னுடைய அப்பா ராம்குமாரை பற்றி ஏதாவது போஸ்டர்கள் எழுதும்போது குறிப்பிடுவார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் இதுவரையிலும் எந்த இடத்திலும் சிவகுமார் தன்னுடைய மகன் என குறிப்பிட்டது கிடையாது.