அப்போல்லாம் புருஷன் மேல அக்கறை இல்லையா, ஜோதிகா பண்ண தப்பே இதுதான்.. ராதாரவியின் பளீச் பதில்!

Jyotika: சூர்யாவின் தொடர் தோல்விக்கு ஜோதிகா தான் காரணம் என அங்கே இங்கே அரசல் புறசலாக பேசப்பட்டது. ஆனால் அதை நடிகர் ராதாரவி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். ராதாரவி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் திரையரங்கு உரிமையாளர்கள் youtube விமர்சனத்திற்கு தடை விதிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி சூர்யாவின் உறவினர். அதனால் தான் இப்படி பேசுகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை கிடையாது. கங்குவா படத்தை பொருத்தவரைக்கும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது.

முதல் அரை மணி நேரம் படம் சரியில்லை என்று அவரே அறிவிப்பு வெளியிடுகிறார். அதன் பின்னர் அந்த அரை மணி நேரம் வெட்டப்பட்டு விட்டதாக கூட சொல்லப்படுகிறது. அதன் பின்னரும் அந்த படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

கங்குவா திரையிடப்படும் தியேட்டர்களில் நானே பார்த்தேன் கூட்டம் அவ்வளவாக இல்லை. சூர்யா உண்மையிலேயே கடுமையாக உழைக்கக் கூடியவர். அவருடைய அப்பா போலவே நல்ல உடற்பயிற்சி செய்யக் கூடியவர்.

ஜோதிகா இப்போது தன்னுடைய கணவர் நடித்த படத்திற்காக குரல் எழுப்புகிறார். ஆனால் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அவர் ஏன் அங்கு வரவில்லை. அந்த நிகழ்ச்சியை அவர் ஏன் புறக்கணித்தார். அப்போதெல்லாம் இந்த அக்கறை இல்லையா, இப்போ வந்துட்டு வானத்துக்கும் பூமிக்கும் புதுசா என்ன அர்த்தம் என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்து இருக்கிறார் நடிகர் ராதாரவி.

Leave a Comment