கடந்த நான்கு வருடங்களில் சிம்பு மூன்று படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். 2022 இல் இருந்து இப்பொழுது வரை அவருக்கு சினிமா கேரியர் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
கடைசியாக சிம்புக்கு வந்த மூன்று படங்களும் சொதப்பியது, மகா, வெந்து தணிந்தது காடு, பத்து தலை என எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் சிம்பு கொஞ்ச நாட்களாக மன குழப்பத்தில் இருந்து வருகிறார்.
2021 இல் சிம்புக்கு ஹிட்டான படம் மாநாடு. அந்த படத்திற்கு பின்னர் சிம்புவின் கேரியர் பெரிய இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கையில் தொடர்ந்து சொதப்பலாகவே இருக்கிறது. தற்போது தக்லைப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
எஸ் டி ஆர் 48 படம் அவருக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இதற்கிடையில் வந்த வாய்ப்பை விட வேண்டாம் என தற்போதுஹரிஷ் கல்யாணுக்காக ஒரு வேலை செய்கிறார்.
ஹரிஷ் கல்யாண் நடித்து முடித்திருக்கும் படம் டீசல். தற்சமயம் அந்த படத்தின் “பீர் “ பாடல் வெளியாகி செம ஹிட்டடித்துள்ளது இதனால் படத்திற்கு ஹைப் எகிறி உள்ளது. இப்பொழுது இந்த படத்தில் இன்னொரு பாடலை சிம்புவை பாட அழைப்பு விடுத்திருக்கின்றனர். சிம்பு குரல் வேண்டும் என இயக்குனர் அடம் பிடித்து வருகிறாராம். மற்றொரு பாடலை சிம்பு பாட இருக்கிறார்.