Rajinikanth: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் ஹை பட்ஜெட் என்றால் அது ரஜினி படமாக தான் இருக்கும். ரஜினியை நம்பி 500 கோடி கூட முதலீடு போட தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
74 வயதிலும் இவர் மீது தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைப்பதற்கு இந்த பத்து விஷயங்கள் தான் முக்கிய காரணம்.
*. இந்திய சினிமா என்றால் உலக அரங்கில் ஒரு சில நடிகர்களின் முகம்தான் ஞாபகம் வரும். அதில் சூப்பர் ஸ்டார் ஒருவர்.
*. நான்கு தலைமுறை ஹீரோவாக இருப்பதால் ரஜினியின் படங்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.
*. ரஜினி என்ற பெயருக்கே பிசினஸ் அமோகமாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ரஜினி படம் என்றால் கண்டிப்பாக முதல் ஒரு வாரத்தில் கலெக்ஷன் கல்லா கட்டிவிடும்.
*. ரஜினி என்ற ஒரு இமாலய பிம்பம் படத்தில் இருப்பதால், வேறு எதன் மீதும் ரசிகர்களால் கவனம் செலுத்த முடியாது.
*. பாபா படத்திலிருந்து ரஜினிகாந்த் படத்தின் நஷ்ட கணக்குகளை பார்த்து விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.
*. ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் மற்ற பெரிய நடிகர்களை அந்த படத்தில் கொண்டு வருவது என்பது எளிதாகிவிடும்.
*.படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ரஜினியை தியேட்டரில் பார்த்தால் போதும் என ஒரு 50 சதவீத கூட்டம் இன்னும் தியேட்டருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.
*.தமிழ் சினிமாவில் 100 கோடி கலெக்ஷன் என்பதை முதலில் கொண்டு வந்தது ரஜினி தான். அதை தொடர்ந்து பெரிய பெரிய ரெக்கார்ட் பிரேக்குகள் அவர்தான் செய்து வருகிறார்.
*. நெல்சன் போன்ற ஒரு இளம் இயக்குனரை வைத்து, 500 கோடி கலெக்ஷன் கொடுக்க முடியும் என்பதெல்லாம் ரஜினிகாந்த்திற்கு மட்டும் தான் சாத்தியம்.