திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு! நயன்தாரா VS திரிஷா, சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோலிவுடை பொறுத்த வரையில் ஹீரோயின்களில் டாப்-ல் இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா தான். பெரிய படங்கள் இவர்களிடம் தான் செல்லும்.

சமீப காலமாக நயன்தாரா லைன் அப் விட திரிஷா லைன் அப் அதிகமாக இருக்கிறது. அடுத்தடுத்து திரிஷா நடிப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று ஆறு படங்கள் வருகிறது.

ஒரு காலத்தில் நயன்தாரா டாப்-ல் இருந்தார். ஆனால் தற்போது திரிஷா அந்த நிலைக்கு வந்து விட்டார். நயன்தாராவின் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒரே அளவு சம்பளம் பெற்று வருகிறார்கள். எப்போதுமே நயன்தாரா த்ரிஷாவுக்குள் ஒரு பனி போர் இருந்த மாதிரியும் தெரிகிறது.

சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் இவர்கள் இருவருக்குமே சொத்து என்று ஏகப்பட்டது உண்டு. அவர்கள் சேர்த்து வைத்த சொத்து மட்டுமே இவ்வளவா என்று ரசிகர்கள் ஆச்சரியம் தான் பட்டு வருகிறார்கள்.

நயன்தாராவை பொறுத்த வரையில் அவர் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், பல தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார்.

இப்படி பிசினெஸ் வுமன் மற்றும் நடிகையாக வளம் வரும் நயன்தாரா மொத்தமாக 200 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளார்.

மேலும் நடிகை திரிஷா, வெளியில் சொல்லாமல் silent-ஆக பல பிசினெஸ் செய்து வருகிறார். அவர் அப்படி கடந்த 22 வருடமாக சினிமா துறையில் நடிகையாக இருந்து சேர்த்து வைத்த சொத்து மட்டுமே 120 கோடி என்று கூறப்படுகிறது.

இவர்கள் இருவரில் யாரு பெருசுன்னு அடித்து காட்டினால் நிச்சயம் நயன்தாரா தான்.

- Advertisement -

Trending News