வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Vanangaan: பாலா இயக்கத்தில் சூர்யா முதலில் நடித்த வணங்கான் சில காரணங்களால் அருண் விஜய் கைக்கு வந்தது. மாதக்கணக்கில் நடைபெற்று வந்த இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிலும் சிவகார்த்திகேயன் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு அருண் விஜய் சீமராஜா படம் வெளிவந்த போது ஒரு பதிவு போட்டிருந்தார்.

வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு என ட்வீட் செய்திருந்தார். சிவகார்த்திகேயனை தான் அவர் கலாய்க்கிறார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் இருதரப்பு ரசிகர்களுக்கும் எப்போதுமே சோசியல் மீடியாவில் வாய்க்கா தகராறு தான். இந்த சூழலில் சிவகார்த்திகேயன் விழாவில் பங்கேற்றது அவருடைய மதிப்பை இன்னும் உயர்த்தி உள்ளது.

இதன் மூலம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். சோசியல் மீடியா நெகட்டிவ் கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது.

அதேபோல் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் வணங்கான் விடாமுயற்சியுடன் மோதுகிறது. இரண்டு படங்களும் V என தொடங்குகிறது.

அதனால் இரண்டுமே V என்ற வெற்றியை தான் அடையும் என தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படியாக அவருடைய ஈகோ இல்லாத பேச்சு பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

Trending News