தளபதி விஜயை வைத்து Goat படத்தை இயக்கிய பிறகு வெங்கட் பிரபு Most wanted இயக்குனராக மாறிவிட்டார். அவரது அடுத்த ஹீரோ யார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார் என்று கூறி வந்த நிலையில், அதற்க்கு வாய்ப்பு இல்லை என்பது போல் பதிலளித்து வருகிறார் வெங்கட் பிரபு.
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ண போகிறார் என்றும், அதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் என்றெல்லாம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில், தற்போது எனது அடுத்த ஹீரோ யார் என்பதை நானே இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறிவருகிறார் வெங்கட் பிரபு.
ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது..
இது தொடர்பாக வெங்கட் பிரபு கூறியதாவது, “ஆரம்பத்தில் நான் AGS தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. அதனால், முதலில் சிவகார்த்திகேயனை வைத்து தான் AGS-க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கும் முடிவில் இருந்தேன்.
ஆனால் அதற்க்கு நடுவில், தளபதி விஜயிடம் Goat படத்தின் கதையை சொல்லி அவருக்கு பிடித்துவிட்டதால், அவரை வைத்து முதலில் ஒரு படம் AGS தயாரிப்பில் இயக்கினேன்..”
“ஆனால் தற்போது, அந்த ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டது. அதனால், சிவகார்த்திகேயனை வைத்து AGS நிறுவனத்துக்கு படம் பண்ண வாய்ப்பு இல்லை. அடுத்தாக சத்யஜோதி பிலிம்ஸ்-க்கு தான் நான் படம் பண்ணி கொடுக்கவேண்டும்.. அதற்கான வேலைகள் தான் நடந்துகொண்டு இருக்கிறது. எனது அடுத்த ஹீரோ யார் என்பதை இனிமேல் தான் யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில், அஜித்திடம் வெங்கட் பிரபு ஒரு கதை சொன்னதாகவும், அவருக்கு அந்த கதை பிடித்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. மேலும் அது மங்காத்தா 2 படமாக கூட இருக்கலாம் என்றெல்லாம் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இப்படி இருக்க, உண்மையில் வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ யார்? சிவகார்திகேயனா இல்ல அஜித்தா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.