இந்தியன் 2 கொடுத்த தோல்வி சங்கரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. தற்பொழுது வெளி வரப்போகும் கேம் சேஞ்சர் படத்தை மலை போல நம்பி உள்ளார்.
இப்பொழுது அவரது கனவு படமான ‘வேள்பாரி’ கதையை எழுதி முடித்துள்ள சங்கர் அதற்குண்டான நடிகர்களை தற்போது செய்து தேர்வு வருகிறார்.
பெரிய நடிகர்கள் எல்லாம் கை விரித்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மேனேஜரிடம் பேசி வருகிறார். ஆனா சிவகார்த்திகேயன் பிடி கொடுத்த மாதிரி தெரியல. pan india படமாக வர வேண்டும் என் தீவிரமாக இருக்கிறார் சங்கர்.
அதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள இன்றைய பெரிய நடிகர்களுக்கு வலை விரித்துள்ளார். இந்தியன் 2 கொடுத்த படுதோல்வியால் சில நடிகர்கள் யோசிக்கிறார்கள்.
தற்போது ராம்சரனை வைத்து இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் யார் நடிக்கிறார்கள் என்று..
ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன் என சங்கர் மேல் பாவப்படுகிறார்கள் சினிமா விரும்பிகள்.