ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஜெ-வை பார்த்து நாக்கை துருத்தினாரா கேப்டன்?. 13 வருடங்கள் கழித்து உண்மையை சொன்ன ஜெயக்குமார், இப்போ சொல்லி என்ன பயன்?

Captain Vijayakanth: காலம் கடந்து கொடுக்கப்படும் நீதி கூட அநீதிக்கு சமமானது. அப்படி ஒரு விஷயம் தான் கேப்டன் விஜயகாந்திற்கு இப்போது கிடைத்திருக்கிறது.

விஜயகாந்த் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அனைத்து கட்சி சார்பிலும் அவருக்கு கடந்த 28ஆம் தேதி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் அதிமுக முக்கிய தலைவர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். பிரேமலதாவை சந்தித்து நினைவஞ்சலி செலுத்திய பின் ஜெயக்குமார் மீடியாக்களிடம் பேசினார்.

அப்போது 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த்திற்கு இடையே நடந்த வாக்குவாதத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து ஜெயக்குமார் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லி இருக்கிறார்.

இப்போ சொல்லி என்ன பயன்?

திமுக மொத்தமாகவே மக்களின் ஆதரவை இழந்து, அந்த இடத்திற்கு தேமுதிக வந்த நேரம் அது. சட்ட சபையில் ரொம்பவும் ஆரோக்கியமான விவாதம் நடந்து கொண்டிருந்ததாம்.

விஜயகாந்த் கேள்வி கேட்க, அதற்கு சரியான பதிலை ஜெயலலிதா சொல்ல என ரொம்பவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அப்போது வேறொரு கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த எம்எல்ஏ ஒருவர் முன்னாடி நடந்து வந்து விஜயகாந்த்தை பார்த்து தகாத வார்த்தை ஒன்றை சொல்லி இருக்கிறார்.

அதனால் தான் கோபம் வந்து விஜயகாந்த் நாக்கை துருத்தி இருக்கிறார். இதை டிவியில் பார்ப்பவர்களுக்கு விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து தான் அப்படி செய்தார் என்பது போல் இருக்கும்.

தற்போது அந்த எம்எல்ஏ கூட அதிமுக கட்சியில் இல்லையாம். அந்த சமயத்தில் சட்டசபை சபாநாயகராக இருந்தவர் ஜெயக்குமார்.

கலவரம் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதால் தான் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்களை உடனே சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றினார்.

அப்போதைய தேமுதிகவின் முக்கிய தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் கூட இந்த முடிவு சரியானது என சொல்லினாராம்.

அதன் பிறகு நடந்த அத்தனை நடவடிக்கைகளுக்கும் விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக ஜெயக்குமார் பேசி இருக்கிறார்.

13 வருடங்கள் கழித்து அவர் மறைந்த பிறகு சொன்ன இந்த விஷயத்தை, அப்போதே சொல்லி இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது மக்களின் ஆதங்கம்.

Trending News