புறநானூறு படத்துக்கு கிடைத்த புது டைட்டில்.. சூர்யா பிம்பத்தை எஸ் கேவை வைத்து மாற்றிய சுதா கொங்கார 

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் மாற்றப்படுவதால் இதுவரை அந்த படத்தை  எஸ் கே 25 என கூறி வந்தனர். இப்பொழுது அதற்கு ஏற்ற டைட்டில் ஒன்றை வைத்து அசத்தியுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.

 ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடக்கும் கதை களத்தை கையில் எடுத்திருக்கிறார் சுதா கொங்கார. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து, இப்பொழுது சிவகார்த்திகேயனிடம் சென்றுள்ளது. சூர்யா பாலிவுட் சென்று  ஹிந்தி படங்களிலும் நடிப்பதாக இருந்தது.

 ஹிந்தி மொழி எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்து விட்டு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு சூர்யாவிற்கு மனமில்லை. அதனால் இந்த படத்தில் இருந்து ஆரம்பத்திலேயே விலகி விட்டார் அதன் பின்னர் தான் சிவகார்த்திகேயன் இதில் கமிட் ஆனார். ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கு பின்னர் இதில் நடிக்க உள்ளார் சிவா.

 இப்பொழுது இந்த படத்திற்கு”1965” என பெயர் சூட்டியுள்ளனர் 1960களில் ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அந்த பின்புலத்தின் கதைக்களம் என்பதால் இதற்கு ஆண்டுகள் குறித்த பெயரை சூட்டி விட்டனர். இந்த டைட்டில் படத்திற்கு  நன்றாகவே பொருந்தி உள்ளது.

 படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ்  ஸ்டூடண்டாகவும் நடித்துள்ளார். பள்ளிகளிலேயே நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ளும் அவர் அதன் பின்னர் ஹிந்தி  போராட்டத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பதுதான் கதையாம்.

Leave a Comment