செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிக்பாஸ் 8-ல் டேஞ்சர் சோனில் இருக்கும் 4 பேர்.. டபுள் எவிக்சனில் வெளியேறும் 2 ஸ்ட்ராங் போட்டியாளர்கள்!

Bigg Boss8: கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே இருப்பதால் தொடர்ந்து டபுள் எலிமினேஷன் நடந்து வருகிறது.

கடந்த வாரம் அன்சிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் எதிர்பாராத விதமாக வெளியேறி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்கள்.

வெளியேறும் 2 ஸ்ட்ராங் போட்டியாளர்கள்!

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஓட்டு விழுந்த நிலவரப்படி நான்கு பேர் டேஞ்சர் போனில் இருக்கிறார்கள். ஜாக்குலின், அருண், பவித்ரா மற்றும் மஞ்சரி தான் அந்த நான்கு போட்டியாளர்கள்.

இதில் பவித்ரா மற்றும் மஞ்சரி இருவருமே குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள். இந்த ரெண்டு பேரை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மஞ்சரி தான் குறைவான ஓட்டுகளை பற்றி பெற்றிருக்கிறார்.

ஒரு வேளை டபுள் எலிமினேஷன் நடந்தால் பவித்ரா மற்றும் மஞ்சரி வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

அது இல்லாமல் ஒருவர் மட்டுமே வெளியேற வேண்டி வரும் போது மஞ்சரி தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஓட்டுகள் போடுவதற்கு இன்னும் சில மணி நேரங்களை இருக்கும் நிலையில் இந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News