புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அமரன் வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு முளைத்த கொம்பு.. SK25 படப்பிடிப்பில் கொடுக்கும் அலப்பறை

Sivakarthikeyan: கடந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக இருந்தது. கமல் தயாரிப்பில் அவர் நடித்த அமரன் மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது.

அதுமட்டுமின்றி முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறை தான். அந்த அளவுக்கு எல்லா பக்கம் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

அதனால் திரை உலகில் அவருடைய மார்க்கெட் இன்னும் அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். அதை அடுத்து தற்போது அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் சுதா கொங்கரா இயக்கும் SK 25 படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அங்குதான் சிவகார்த்திகேயன் ஓவர் அலப்பறை கொடுப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

SK25 படப்பிடிப்பில் கொடுக்கும் அலப்பறை

பொதுவாக சிவகார்த்திகேயன் எல்லோரிடமும் எதார்த்தமாக பழகக் கூடியவர். ஆனால் இப்போது அவருக்கு என்ன ஆகிவிட்டது என படப்பிடிப்பில் இருப்பவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்களாம்.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் அவருக்கான கேரவனுக்கு அருகிலேயே ஆபீஸ் செட்டப்பில் டேபிள் சேர் போடப்பட்டிருக்கிறதாம். எதற்கு என்று விசாரித்ததில் அது சிவகார்த்திகேயனின் ஆபீஸ் என்கின்றனர்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக அங்கு சென்று சில வேலைகளை மேற்பார்வை செய்கிறாராம். அதன் பிறகு மீண்டும் கேரவனுக்குள் சென்று விடுகிறாராம்.

இந்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் பெரிய பெரிய ஹீரோக்கள் கூட இந்த அளவுக்கு பந்தா செய்யவில்லையே என திரையுலகில் அதிசயித்து போகின்றனர்.

அதே சமயம் அதே படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி கேஷுவலாக இருக்கிறாராம். எந்த பந்தாவும் அவரிடம் இல்லை. இருவரையும் பார்க்கும் படக்குழுவினர் சத்தம் இல்லாமல் இதை கிசுகிசுத்து வருகின்றனர்.

இருப்பினும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பிலும் இருப்பதால் அதற்கான வேலையாக கூட இருக்கலாம் என்கின்றனர். ஆனாலும் ஊருல இல்லாத அதிசயமா இருக்கு என சிலர் கேலி பேசி வருகின்றனர்.

Trending News