செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மோதிக்கொள்ளும் விக்ரம்-ரவி மோகன்.. அண்ணன், தம்பிக்குள்ள அப்படி என்னப்பா பஞ்சாயத்து?

Vikram-Ravi: ஆதித்த கரிகாலனுக்கும், அருள்மொழிவர்மனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என கோலிவுட் குழம்பி கிடக்கிறது.

விக்ரம் மற்றும் ரவி மோகன் இருவருக்கும் பொன்னியின் செல்வன் பட சமயத்தில் இருந்தே நல்ல நட்பு இருக்கிறது.

இது அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரமோஷன் விழாக்களிலேயே நன்றாக தெரிந்தது. அப்படி இருக்கும்போது இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள தேதி குறித்து இருக்கிறார்கள்.

ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்கள் இல்லை. நடிகர் விக்ரமின் நிலைமையும் இதுதான்.

மோதிக்கொள்ளும் விக்ரம்-ரவி மோகன்

விக்ரம் அடுத்து வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும், தற்போது வெளியாக இருப்பது இரண்டாம் பாகம் என இயக்குனர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்த படத்தை ரிலீஸ் செய்ய மார்ச் 28ஆம் தேதி அதாவது ரம்ஜான் பண்டிகையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதே தேதியில் ஜெயம் ரவி தன்னுடைய பேண்டஸி படமான ஜீனி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார் தமிழ் சினிமாவில் இது போன்ற பேண்டஸி படம் ரொம்ப நாள் கழித்து வெளிவர இருக்கிறது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஜெயம் ரவிக்கும் இந்த படத்தில் வெற்றி ரொம்பவும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த படமும், விக்ரமின் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது என்பது எல்லோருக்குமே கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கிறது.

இருவரும் கலந்து பேசி தேதியை மாற்றிக் கொள்கிறார்களா, இல்லை ஒரே நாளில் களம் இறங்குகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News