புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அர்ச்சனாவுக்கு அள்ளி கொடுத்துட்டு முத்துகுமரனுக்கு கிள்ளி கொடுத்த பிக்பாஸ்.. இதுக்கு இப்படி ஒரு காரணமா?

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 முடிந்த போதிலும் அந்த சூடு என்னும் குறையவில்லை.

நாங்கள் நினைத்தவர் வெற்றி பெறவில்லை, இவர் எப்படி இந்த இடத்தில் வந்தார் என ஆளாளுக்கு தங்கள் சொந்த கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் முத்துக்குமரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதான் டைட்டில் வின்னர் ஆயிட்டாரே அதுக்கப்புறம் என்ன அநீதி என்று எல்லாருக்கும் சந்தேகம் வரலாம்.

முத்துக்குமரனுக்கு கொடுத்த பரிசு தொகையில் தான் பிரச்சனையே. அதாவது கடந்த சீசனில் டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை, ஒரு சொகுசு கார், வீட்டு மனை வழங்கப்பட்டது.

ஆனால் முத்துக்குமரனுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் தான் கொடுக்கப்பட்டது. பரிசுத்தொகையில் இருந்து 50 லட்சம் பணத்தை தான் மணி டாஸ்க் வெற்றி பெற்ற விஷால், ராயன் போன்றவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

முன்னாடி சீசன்களில் எல்லாம் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறுபவர்களுக்கு அந்த தொகை தனியாக கொடுக்கப்படும்.

கடந்த சீசனில் பூர்ணிமா 16 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இதுவரை வெளியான பிக் பாஸ் சீசனில் அதிக தொகையுடன் வெளியேறியவர் இவர்தான்.

அப்படி இருக்கும்போது இந்த சீசனில் டைட்டில் வின்னரின் பரிசு தொகையிலேயே கை வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த சீசனுக்கு டிஆர்பி கம்மியாக வந்தது தான்.

மேலும் அதிகமாக முன்வரவில்லை. இதற்கு காரணம் கமலஹாசன் இல்லாமல் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான் என்றும் சொல்கிறார்கள்.

Trending News