Parandur: பரந்தூரில் விமான நிலையம் கட்டப்படக்கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்கள் கிட்டதட்ட 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்றைய தினம் நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் பரந்து சென்றிருந்தார். அதன் பிறகு இந்த பிரச்சனை எல்லோராலும் கவனிக்கப்படும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.
விஜய் நேற்று மக்கள் கூட்டத்திற்கு நடுவே தன்னுடைய பரபரப்பான பேச்சை வெளிக்காட்டி இருந்தார்.
பேச்சுக்கு நடுவே பரந்தோர் விமான நிலையம் கட்ட வளர்ச்சியை தாண்டி வேறு ஏதோ லாபம் இருக்கிறது என சுட்டிக்காட்டி இருந்தார்.
அட! விஜய் சரியா தான் சொல்லிருக்காரு
என்னவாக இருக்கும், விஜய் எந்த லாபத்தை பற்றி மறைமுகமாக சொல்கிறார் என்று எல்லோருக்குமே கேள்வி இருந்தது. அதற்கு பதிலாக இன்று வலைப்பேச்சு பிஸ்மி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
அதாவது இதை சந்தேகத்தின் அடிப்படையில் தான் அவர் கேள்வியாக கேட்டிருக்கிறார்.
பரந்தூரில் விமான நிலையம் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே அந்த இடத்தை சுற்றி அரசியல்வாதிகளும், செலிபிரிட்டிகளும் இடங்களை வாங்கி போட ஆரம்பித்து விட்டார்களாம்.
இப்போது விமான நிலையத்தை ரத்து செய்தால் அந்த இடத்தின் மதிப்பு எல்லாம் குறைந்து விடும்.
அதனால் தான் தற்போது இது மிகப் பெரிய இழுபறியாக இருக்கிறதாம். இதைத்தான் விஜய் லாபம் என்று சொல்லி இருக்கலாம் என பிஸ்மி பேசி இருக்கிறார்.