வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குழாயடி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா.. திரிஷா வீட்டில் வெடித்த பூகம்பம்

அஜித் – விஜய் போல் சக போட்டியாளர்கள் என்றால் நயன்தாரா – திரிஷா தான். இவர்களுக்குள் யார் லேடி சூப்பர் ஸ்டார் என அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திரிஷா வீட்டில் பெரிய பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது.

திரிஷா நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளார். போதுமான அளவு காசு சம்பாதித்து விட்டார், அதை முறையாக முதலீடும் செய்துள்ளார். வருகின்ற இந்த காசு போதும் என நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் திரிஷா அம்மா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம்.

திரிஷா இப்பொழுது வருகின்ற பெரும்பாலான வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து வருகிறார். இது திரிஷாவின் தாயாருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். ஒரு பக்கம் ஓய்வு முடிவில் இருக்கும் திரிஷாவை அவர் தொடர்ந்து நடிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

சூர்யா 45 , தக் லைஃப் படங்களுக்கு பிறகு இந்த முடிவை எடுக்க உள்ளாராம். நயன்தாரா மார்க்கெட் சரிவை சந்தித்தபோது திரிஷா தான் அந்த இடத்தை பூர்த்தி செய்து வந்தார். இருவரும் 12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். இதுதான்இவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி உள்ளது.

40 வயதை எட்டிய போதிலும் இருவருக்கும் கொஞ்சம் கூட ஹீரோயின் லுக் குறையவில்லை. இப்பொழுது திரிஷா எடுத்த இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இனிமேல் நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் ஹீரோயின் இல்லாததால் ரூட் கிளியராகி உள்ளது.

Trending News