Vishal: பொதுவாகவே நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வது ஒரு அலாதி பிரியம்.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் கேள்வி பதில் நடிகர்கள் மற்றும் நடிகர்களை பற்றி இந்த மாதிரி வரும்.
அதில் தான் ஒரு சில நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பதில்களும் இருக்கும்.
ஆனால் சமீப காலமாக யூடியூபில் எந்த பக்கம் திரும்பினாலும் நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தை பேசுவதற்கென்றே சில பெரும்புள்ளிகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் செலிபிரிட்டிகள் என்பதை தாண்டி இறந்து போனவர்களை கூட இவர்கள் விடுவதா இல்லை.
பூனைக்கு மணி கட்டிய நாசர்-விஷால்!
ஏற்கனவே நிறைய நட்சத்திரங்களுக்கு இது போன்ற பேட்டி கொடுப்பவர்கள் மீது கோபம் அதிகமாக இருந்தது.
ஆனால் யாருமே இதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. கடைசியில் இந்த பூனைகளுக்கு மணிகட்டி இருக்கிறார்கள் நடிகர் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் நாசர் மற்றும் விஷால்.
மத கத ராஜா பட வெளியீட்டு விழாவில் விஷாலுக்கு அதிக காய்ச்சலால் கை நடுங்கியது. இது குறித்து இஷ்டத்திற்கு யூட்யூபில் ஒரு சிலர் பேச ஆரம்பித்திருந்தார்கள்.
அதில் எல்லை மீறி ரொம்பவும் தவறாக பேசிய ஒரு சில யூடியூப் சேனல்கள் மற்றும் பேசியவர்கள் மீது நாசர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இதில் சிக்கிய முக்கிய புள்ளிகளில் ஒருவர் பத்திரிக்கையாளர் சேகுவாரா. இரண்டு யூட்யூப் சேனல்களும் இந்த வழக்கில் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சரியாக தெரியவில்லை.
இருந்தாலும் இனி இது போல் பேசுவதற்கு முன்பு இந்த வழக்குகளை பற்றி யோசிப்பார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.