90ஸ் கிட்ஸோட இரண்டு பேவரைட் சீரியலில் எந்த சீரியலின் பார்ட் 2 கன்பார்ம் தெரியுமா?. சன் டிவி எடுத்த முடிவு!

Sun TV: திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த வருடம் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலின் பார்ட் 2 இப்போது தொடங்கி இருக்கிறது. அதே ஸ்டைலில் இன்னொரு சீரியலில் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் சீரியல்கள் நேயர்களால் பார்க்கப்பட்டாலும், 90களின் காலகட்டத்தில் இருந்த பல சீரியல்களை மிஸ் பண்ணும் உணர்வு தோன்றத்தான் செய்கிறது.

அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களை மறக்கவே முடியாது. மெட்டிஒலி, ஆனந்தம், கோலங்கள், திருமதி செல்வம், நாதஸ்வரம் என இந்த ஃபேவரட் லிஸ்ட்டை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இப்போது எதிர்நீச்சலை இயக்கிக் கொண்டிருப்பது. அவருக்கு இணையாக சீரியல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் இயக்குனர் திருமுருகன்.

சன் டிவி எடுத்த முடிவு!

சீரியலுக்குப் பின் அவர் சினிமாவில் எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற இரண்டு படங்களை இயக்கினார்.

திருமுருகனின் ஆகச்சிறந்த படைப்புகள் மெட்டிஒலி மற்றும் நாதஸ்வரம். இந்த இரண்டு சீரியல்களில் ஒன்றுதான் இரண்டாம் பாகத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் மெட்டி ஒலியின் இரண்டாம் பாகம் தான் கன்பார்ம் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காகத்தான் சிங்க பெண்ணே சீரியலை விரைவில் முடிக்க சன் டிவி முடிவெடுத்து இருக்கிறது.

Leave a Comment