சனிக்கிழமை, மார்ச் 1, 2025

அஜித்துக்கு விருது கிடைத்ததை கண்டுக்காத விஜய்?. சுரேஷ் சந்திரா சொன்ன விளக்கம்

Ajith Kumar: பல நாள் சர்ச்சைக்கு விடை கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. நடிகர் அஜித்குமாருக்கு கடந்த வாரம் பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டது.

இதற்காக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் இது குறித்து எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை.

அன்றைய நாளில் நடந்த ஒரு சில சம்பவங்கள் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் அஜித்துக்கும் வாழ்த்து சொல்வார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜித் மீதான பொறாமையின் உச்சகட்டம் தான் விஜய் செய்தது என்று கூட பேசப்பட்டது.

சுரேஷ் சந்திரா சொன்ன விளக்கம்

அது மட்டுமில்லாமல் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் அவரை வெறுப்பேற்றதான் அஜித்துக்கு விருது கொடுக்கிறார்கள் என்று கூட பேசப்பட்டது.

இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சுரேஷ் சந்திரா அஜித்துக்கு விருது கொடுத்ததும் முதலில் போன் பண்ணி வாழ்த்தியதே விஜய் தான் என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அது கார் ரேஸில் ஜெயித்த போதும் விஜய் தான் வாழ்த்து சொன்னாராம். இருவருமே தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்த பிறகு இன்னும் இந்த அஜித் விஜய் சண்டையை வளர்க்காமல் இருப்பதே நல்லது.

Trending News