Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷ் ரொம்ப நாளாகவே ஆனந்தியின் அப்பாவிடம் பெண் கேட்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் வார்டன் கொடுத்த தைரியத்தில் இருவருமே நேரடியாக போய் பெண் கேட்டு விடுகிறார்கள்.
மகேஷுக்கு ஆனந்தியை திருமணம் செய்து வைத்து தன்னை ஒரு சிறந்த தாயாக நிரூபிக்க வேண்டும் என வார்டன் நினைக்கிறார்.
சுயம்புலிங்கம் திடீரென வந்து செய்த பிரச்சினையால் அழகப்பன் யோசிக்க நேரமின்றி நிலை தடுமாறுகிறார்.
கொட்டத்தை அடக்கும் அந்த நபர்
சட்டென மகேஷ் தான் என்னுடைய இரண்டாவது மருமகன் என வாக்கு கொடுக்கிறார். அதே நேரத்தில் ஆனந்தியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்க அன்புவின் அம்மாவும் தயாராகிறார்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் தன்னுடைய அம்மாவிடம் ஆனந்தி வீட்டுக்கு போனதை சொல்கிறான்.
அது மட்டும் இல்லாமல் ஆனந்தியின் அப்பா திருமணத்திற்கு சம்மதித்ததையும் சொல்கிறான். இவர்கள் இருவரும் செய்த வேலைக்கு கண்டிப்பாக மகேஷின் அம்மா பொங்கி எழப் போகிறார்.
வார்டன் தான் இதற்கு உறுதுணையாக இருந்தார் என்று தெரிந்தால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை செய்வார்.
இதனால் வார்டன் பற்றிய ஃப்ளாஷ்பேக் வெளியில் வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. சுயம்புலிங்கம் தூண்டி விட்டதால் ஆனந்தியின் அப்பா சற்று யோசிக்காமல் மகேஷுக்கு வாக்கு கொடுத்து விடுகிறார்.
ஆனந்தி இனி அப்பாவிடம் அன்புவை தான் காதலிக்கிறேன் என்று சொன்னால் கொடுத்த வாக்கை தன்னுடைய பெண்ணின் காதலுக்காக மாற்றிக் கொள்கிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.