Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு இந்த வருடம் ஜென்ம சனி ஏதும் ஆரம்பித்து விட்டதா என தெரியவில்லை.
லேடி சூப்பர் ஸ்டார், தன்னம்பிக்கை நாயகி, கடும் உழைப்பாளி என ஒரு காலகட்டத்தில் பெயர் வாங்கிக் கொண்டிருந்தார்.
எப்போது தனுஷுக்கு எதிராக அறிக்கை விட்டாரோ அப்போதே அவருடைய பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆக ஆரம்பித்தது.
நாளுக்கு நாள் தன்னுடைய வாயை திறந்து இவர் பேசும் விஷயங்கள் எல்லாமே சர்ச்சைகள் ஆகி கொண்டிருக்கின்றன.
எல்லை மீறிய அட்ராசிட்டி
இப்படி திரும்புகிற இடமெல்லாம் கன்னி வெளியாக இருக்கிற நிலையில், நயன்தாராவை பற்றியும் நாளுக்கு ஒரு அப்டேட் கொடுத்து வருகிறார்கள் வலைப்பேச்சு சேனல் காரர்கள்.
பொதுவாக படப்பிடிப்பு என்பது ஒரு சில காட்சிகளை வெளியூருக்கு சென்று தான் எடுக்க வேண்டும். ஒரு சில காட்சிகளை ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்து விடலாம்.
ஆனால் ஒரு லொகேஷனையே செட் போட வைத்திருக்கிறார் நயன்தாரா. அவர் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஒரு சில காட்சிகள் ஊட்டியில் நடப்பது போல் இருக்குமாம்.
ஆனால் என்னால் ஊட்டிக்கு எல்லாம் வர முடியாது இங்கேயே செட் போட்டு விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளரும் சென்னை மெகா மார்ட் அருகில் ஊட்டி மாதிரியே செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்.
இந்த விஷயத்தை தான் இப்போது போட்டு உடைத்து இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். மேலும் புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் இவர்களெல்லாம் நம்பி களத்தில் இறங்காதீர்கள்.
இவர்கள் வளர்ந்து வரும் வரை ஒரு மாதிரி இருப்பார்கள், வளர்ந்த பிறகும் மொத்தமாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என எச்சரித்திருக்கிறார்.