Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஓடிடி பக்கம் கரை ஒதுங்கி இருக்கிறார். ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என அவரே நினைத்திருந்தார்.
போதாத குறைக்கு தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்கள் எதிலுமே நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
வழக்கம் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சத்தை கொண்ட அன்னபூரணி படத்தில் நடித்துப் பார்த்தார்.
OTT பக்கம் கரை ஒதுங்கிய நயன்தாரா
அந்த படம் உன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. இப்போது வரைக்கும் ராக்காயி படத்தை தவிர வேறு எந்த படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நயன்தாரா டெஸ்ட் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதற்கான அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியானது. அதன் பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த செய்தியும் வரவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதை நயன்தாராவே அதிகாரம் பூர்வமாக அறிவித்திருக்கிறார்.