Serial: சன் டிவி ஒளிபரப்பாகும் கயல் சீரியலுக்கு விரைவில் சுபம் போட இருக்கிறார்கள். இந்த சீரியலின் நேரத்தை பிடிக்க வருவது பிரபல சீரியலின்இரண்டாம் பாகம்.
டிஆர்பி ரேட்டிங்கில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது கயல் சீரியல். ஆனால் தற்போது சிங்க பெண்ணே முதல் இடத்திலும், மூன்று முடிச்சு இரண்டாவது இடத்திற்கும் வந்துவிட்டது.
போற போக்கை பார்த்தால் கயல் சீரியலின் ஸ்லாட்டை மற்ற சேனலின் சீரியல் பிடித்து விடும் என்பது சன் டிவிக்கு தெரிந்து விட்டது.
படப்பிடிப்பை முடித்த திருமுருகன்
இதனாலேயே இந்த இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள். திருமுருகன் ஏற்கனவே போன தமிழ் புத்தாண்டு தினத்தன்று சன் டிவிக்கு சீரியல் பண்ண இருப்பதாக தெரிவித்திருந்தார்.
படப்பிடிப்பு பற்றி எந்த தகவலும் வெளியில் வராமல் இருந்தது. ஆனால் அவர் கடந்த செப்டம்பர் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே ஷூட்டிங் தொடங்கி விட்டாராம்.
கிட்டத்தட்ட இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறதாம். அது மட்டும் இல்லாமல் மெட்டி ஒலி சீரியல் இரண்டாம் பாகத்தை தான் அவர் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியல் பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.