Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தம்பி இன்று சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகி இருக்கிறார். இதற்கு காரணம் இவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன பதில் தான்.
அஜித்குமார் பெரும்பாலும் தன்னைப் பற்றிய சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு விஷயம் வெளி வராத அளவு பார்த்துக் கொள்வார்.
அதே மாதிரி தான் அவருடைய குடும்பத்தை பற்றியும் நமக்கு பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஜித்துக்கு அணில் குமார் என்ற ஒரு தம்பி இருக்கிறார்.
அஜித் பத்தி கேக்காதீங்க
இவர் ஜோடி 360 என்ற மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். அஜித்தின் தம்பி என்று சொல்லிக் கொண்டு மீடியா முன்பு இத்தனை வருடங்கள் அவர் வந்து நின்றதே கிடையாது.
சென்னையில் இன்று நாய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது.
அதில் கலந்து கொண்ட அஜித்தின் தம்பி நாய்களை எப்படி பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
அப்போது பத்திரிகையாளர்கள் அஜித் பற்றி கேள்வி கேட்க முனைந்திருக்கிறார்கள். அதற்கு அனில்குமார் நாய் பத்தி மட்டும் கேள்வி கேளுங்க என்று சொல்லி இருக்கிறார்.
அதையும் தாண்டி அஜித் பத்மபூஷன் விருது வாங்கியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ரொம்ப சந்தோஷம் என்று முடித்துக் கொண்டார்.
அஜித்குமார் தம்பி என்பதை தாண்டி தனக்கான தனித்துவத்தை அவர் விரும்புகிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.