Manikandan: சினிமா ரசிகர்களிடையே சமீபகாலமாக பெரிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தான் மணிகண்டன்.
ஆரம்ப காலகட்டங்களில் ஒன்று இரண்டு படங்களில் நடித்திருக்கும் போதும் சரி, ஜெய் பீம் படத்தில் நடித்த போதும் சரி பெரிய அளவில் இவர் மக்களால் கவனிக்கப்படவில்லை.
குட் நைட் படத்திற்கு பிறகு தான் மணிகண்டனின் சினிமா வாழ்க்கை மொத்தமாக மாறியது.
அந்த படத்திற்குப் பிறகு இவர் கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் மணிகண்டனுக்குள் இருக்கும் பல திறமைகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது.
மணிகண்டனை எச்சரிக்கும் இணையவாசிகள்
அந்த சமயத்தில் இருந்து அவருடைய பேட்டி வீடியோக்கள் இணையதளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகினார்.
அதிலும் சமீபத்தில் குடும்பஸ்தன் படத்திற்கு பிறகு மணிகண்டன் தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்.
சமீப காலமாக நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். யூட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எந்த பக்கம் போனாலும் மணிகண்டனின் வீடியோக்கள் தான் வருகின்றன.
இது குறித்து இணையவாசிகள் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் கொஞ்ச நாளைக்கு சோசியல் மீடியா பக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் சார்.
இப்போ திறமையானவர், சிறந்த நடிகர் என பாராட்டுவாங்க. தொடர்ந்து உங்களுடைய முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தால் ஓவர்ரேட்டட் நபர் என்று சொல்லி தட்டி கழித்து விடுவார்கள் என எச்சரித்து இருக்கிறார்கள்.